ஆண்ட்ராய்டு 16 பீட்டா 2.1 அப்டேட்டில் இந்த புதிய அம்சங்கள் சோதனை செய்யப்படுகின்றன. இந்த அப்டேட்டின் முக்கிய அம்சம், மவுஸ் கர்சர் மாற்றங்கள். அதாவது, பல திரைகளை இணைக்கும்போது, கர்சரை எளிதாக ஒரு திரையில் இருந்து மற்றொரு திரைக்கு நகர்த்தலாம். இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் வேலை செய்வது போன்ற அனுபவத்தை வழங்கும்.