iPhone : ஆப்பிள் ஐபோன் 12 விலை இவ்வளவு தானா.. அதிரடியாக குறைந்த விலை.. முழு விபரம் இதோ !!

First Published | Aug 22, 2023, 3:55 PM IST

ஆப்பிள் ஐபோன் 12 விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோனை வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

பெரும்பாலான பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்கிறது. அவற்றை வாங்குவது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும். இருப்பினும், நீங்கள் ஸ்மார்ட்போனை மிகவும் மலிவாக மாற்றும் சரியான விலையுடன் அதாவது, சலுகை விலையில் கிடைக்கும் போது வாங்குவது சிறந்ததாகும்.

உங்களுக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் ஸ்மார்ட்போன் உள்ளது. ப்ளிப்கார்ட் (Flipkart) நம்பமுடியாத விலை குறைப்பை மேற்கொண்டுள்ளது.  ப்ளிப்கார்ட் நிறுவனம் ஐபோன் 12 இன் விலையை குறைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல்,  இது உங்களுக்கு மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால் நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாமல் இருப்பதே சிறந்தது.

Tap to resize

ஐபோன் 12 இன் 64ஜிபி வேரியண்ட் அசல் விலை ரூ. 59900. இருப்பினும், ஆன்லைன் ஷாப்பிங் தளம் சலுகை விலையை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போனின் விலையை வெறும் ரூ. 51999, ஸ்மார்ட்போனில் 13 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. கூடுதலாக, ஸ்மார்ட்ஃபோன்களில் அதிக தள்ளுபடிகள் உள்ளது. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் 50000 தள்ளுபடி. ஆனால், தள்ளுபடியின் மதிப்பு உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும்.உங்கள் பகுதியில் எக்சேஞ்ச் சலுகை கிடைக்கிறதா என்பதைச் சரிபார்ப்பது அவசியம்.

வாடிக்கையாளர்கள் HDFC வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2000 வரை உடனடி தள்ளுபடி பெறுவார்கள். மேலும், Flipkart Axis வங்கி கார்டு பரிவர்த்தனைகளில் 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.

Draining Apps : பேட்டரியைக் குறைக்கும் 43 ஆப்ஸ்கள் இதுதான்.. உடனே மொபைலில் இருந்து நீக்குங்க.!!

Latest Videos

click me!