NTES செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?
NTES செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், முகப்புப் பக்கத்தில் Spot Your Train, Live Station, Train Schedule, Train Between Trains, மற்றும் Train Exception Info உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களைக் காண்பீர்கள். ஒரே கிளிக்கில், உங்களுக்குத் தேவையான அனைத்து ரயில் தொடர்பான தகவல்களையும் இதில் பெறலாம்.
Spot Your Train
இந்த அம்சம் உங்கள் ரயில் இப்போது எங்கு வந்து கொண்டிருக்கிறது என்ற நிலையைச் சரிபார்க்க உதவுகிறது. ரயில் பெயர் அல்லது எண்ணை உள்ளிட்டால் ரயில் எங்கே வருகிறது? என்பதை காணலாம். ரயில் நிலைய பெயரின் அடிப்படையிலும் ரயில் வருமிடத்தை அறியலாம்.