வேலைப்பளு குறையணுமா? கூகுள் வொர்க்ஸ்பேஸில் ஜெமினியை இப்படி யூஸ் பண்ணுங்க - பாஸ் பாராட்டுவார்!

Published : Dec 04, 2025, 09:42 PM IST

Gemini ஜிமெயில் மற்றும் கூகுள் வொர்க்ஸ்பேஸில் ஜெமினி AI-ஐ எப்படிப் பயன்படுத்துவது? நீண்ட ஈமெயில்களைச் சுருக்கவும், தானாகவே பதில் எழுதவும் உதவும் ஜெமினி வசதிகள் பற்றிய முழு விவரம்.

PREV
14
Gemini உங்கள் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ்!

தினமும் நூற்றுக்கணக்கான ஈமெயில்கள் வருகிறதா? எதைப் படிப்பது, எதற்குப் பதில் அனுப்புவது என்று குழப்பமா? கவலையை விடுங்கள். உங்கள் சுமையை இறக்கி வைக்க கூகுளின் சக்திவாய்ந்த AI ஆன 'ஜெமினி' (Gemini) இப்போது ஜிமெயில் (Gmail) மற்றும் கூகுள் வொர்க்ஸ்பேஸில் (Google Workspace) நேரடியாக இணைந்துள்ளது. இது எப்படி உங்கள் வேலைப்பளுவைக் குறைக்கிறது என்று பார்ப்போம்.

24
ஜெமினி என்ன செய்யும்?

ஜெமினி என்பது சாதாரண டூல் அல்ல. இது உங்கள் தனிப்பட்ட உதவியாளர் (Personal Assistant) போலச் செயல்படும்.

1. நீண்ட ஈமெயில்களின் சுருக்கம் (Summarize Emails): பல பக்கங்களுக்கு நீண்டிருக்கும் ஈமெயில்களை முழுமையாகப் படிக்க நேரமில்லையா? ஜெமினியிடம் "Summarize this email" என்று கேட்டால் போதும். அந்த ஈமெயிலின் முக்கியக் கருத்துக்களை மட்டும் அழகாகப் பட்டியலிட்டுக் காட்டும்.

2. ஈமெயில் எழுதுவது இனி ஈஸி (Draft Emails Fast): "நாளைக்கு மீட்டிங் இருக்குன்னு ஒரு மெயில் அனுப்பு" என்று ஜெமினியிடம் சொன்னால் போதும். அதுவே ஒரு தெளிவான,  ஈமெயிலை டைப் செய்து கொடுத்துவிடும். 'Help me write' என்ற ஆப்ஷன் மூலம் இதைச் செய்யலாம்.

3. தேடுதல் வேட்டை (Smart Search): பழைய பில், இன்வாய்ஸ் அல்லது குறிப்பிட்ட டாகுமெண்ட் எங்கே இருக்கிறது என்று தேடித் தேடி அலுத்துவிட்டீர்களா? ஜெமினியிடம் கேட்டால், அது உங்கள் ஜிமெயில் மற்றும் கூகுள் டிரைவ் (Google Drive) முழுவதையும் அலசி, நொடியில் அதைக் கண்டுபிடித்துத் தரும்.

34
எப்படிப் பயன்படுத்துவது?

• கம்ப்யூட்டரில்: ஜிமெயில் பக்கத்தின் வலது ஓரத்தில் நட்சத்திர வடிவில் (Star-shaped) 'Ask Gemini' ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்து உங்கள் கட்டளைகளைக் கொடுக்கலாம்.

• மொபைலில்: நீண்ட ஈமெயில்களைத் திறக்கும்போது, மேலே 'Summarize this email' என்ற ஆப்ஷன் தானாகவே தோன்றும்.

44
யாருக்கெல்லாம் பயன்படும்?

மாணவர்கள், பத்திரிகையாளர்கள், பிசினஸ் செய்பவர்கள் என அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக, ஒரே நேரத்தில் பல புராஜெக்ட்களைக் கையாள்பவர்களுக்கு இது நேரத்தை மிச்சப்படுத்தும் அருமையான கருவி.

இனி ஈமெயில் பார்த்துப் பயப்பட வேண்டாம்; ஜெமினி இருக்க பயமேன்!

Read more Photos on
click me!

Recommended Stories