Electricity Bill கோடைகாலத்தில் எகிறும் கரண்ட் பில்லை குறைக்க நினைப்பவரா நீங்கள்? ஏசி, ஃபேன், பிரிட்ஜ் மூலம் மின்சாரத்தை சேமிக்க உதவும் எளிய மற்றும் ஸ்மார்ட் டிப்ஸ் இதோ…
Electricity கோடைகாலத்தில் கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா? மின் கட்டணத்தை அதிரடியாகக் குறைக்க சூப்பர் டிப்ஸ்!
கோடைகாலம் வந்துவிட்டாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெயில், அடுத்து வருவது 'எகிறப் போகும்' கரண்ட் பில்! வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏசி (AC), ஃபேன் மற்றும் கூலர் என அனைத்தும் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பதால், மாத இறுதியில் வரும் மின்கட்டணத்தைப் பார்த்துப் பலருக்கும் வியர்த்துவிடும். ஆனால், ஒரு சில சிறிய மற்றும் ஸ்மார்ட்டான மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்கள் பாக்கெட்டைக் பதம் பார்க்கும் மின் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க முடியும்.
26
ஏசியை 'ஸ்மார்ட்டாக' பயன்படுத்துங்கள்!
பொதுவாக பலரும் ஏசியை 18 டிகிரியில் வைத்தால் தான் அறை விரைவாகக் குளிரும் என நினைத்து அதிக மின்சாரத்தை வீணடிக்கிறார்கள். ஆனால், ஏசியின் வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை வைப்பதுதான் சிறந்தது. வெப்பநிலையை ஒரு டிகிரி அதிகரித்தால் கூட சுமார் 6 சதவீத மின்சாரத்தை நீங்கள் மிச்சப்படுத்த முடியும்.
36
குளிர்ந்த காற்று
ஏசியுடன் சேர்த்து சீலிங் ஃபேனை மிதமான வேகத்தில் ஓட விடுவதன் மூலம், குளிர்ந்த காற்று அறை முழுவதும் வேகமாகப் பரவும். இதனால் ஏசியின் மீதான பளு குறைந்து மின்சாரம் சேமிக்கப்படும். மேலும், ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை ஏசி ஃபில்டரை (AC Filter) சுத்தம் செய்வது மிக அவசியம். ஃபில்டரில் தூசு அடைத்திருந்தால் மோட்டார் அதிக சிரமப்பட்டு இயங்க வேண்டியிருக்கும், இது மின் நுகர்வை அதிகரிக்கும்.
மின்சாரத்தை மட்டுமே நம்பியிருக்காமல் சில எளிய தந்திரங்கள் மூலம் வீட்டை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜன்னல் மற்றும் திரைச்சீலைகளை மூடி வைப்பது, குறிப்பாக அடர் நிறத் திரைச்சீலைகளைப் பயன்படுத்துவது வெயிலின் தாக்கத்தை வீட்டுக்குள் அண்டவிடாமல் தடுக்கும்.
மாலை நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து வைப்பதன் மூலம் குளிர்ந்த காற்று உள்ளே வர வழிவகை செய்யலாம். இதனால் இரவில் நீண்ட நேரம் ஏசி பயன்படுத்த வேண்டிய அவசியம் குறையும். நீங்கள் வீட்டின் மேல் தளத்தில் (Top floor) வசிப்பவராக இருந்தால், கூரைக்கு வெள்ளை நிற 'கூல் ரூஃப்' (Reflective white paint) பெயிண்ட் அடிப்பது வீட்டின் வெப்பநிலையைக் கணிசமாகக் குறைக்கும்.
56
ஸ்விட்ச் ஆஃப் செய்தாலும் கரண்ட் பில் ஏறுமா?
ஆம், ஏறும்! டிவி, லேப்டாப் சார்ஜர், மைக்ரோவேவ் ஓவன் போன்ற பல எலக்ட்ரானிக் பொருட்கள், ரிமோட் மூலம் ஆஃப் செய்யப்பட்டாலும் 'ஸ்டாண்ட்-பை' (Standby Mode) மோடில் தொடர்ந்து மின்சாரத்தை உறிஞ்சிக்கொண்டே இருக்கும். எனவே, பயன்பாட்டில் இல்லாத போது இந்தச் சாதனங்களின் பிளக்கை பிடுங்கி வைப்பது (Unplug) புத்திசாலித்தனம்.
66
ஃப்ரிட்ஜை கோடைக்கால மோடுக்கு மாற்றுவது
அதேபோல, ஃப்ரிட்ஜை சுவரில் இருந்து குறைந்தது 6 அங்குல இடைவெளியில் வைப்பது அதன் மோட்டார் சூடாகாமல் தடுக்கும். ஃப்ரிட்ஜை கோடைக்கால மோடுக்கு (Summer mode) மாற்றுவது, அடிக்கடி கதவைத் திறக்காமல் இருப்பது, மற்றும் சூடான உணவுகளை அப்படியே உள்ளே வைக்காமல் இருப்பது போன்ற சிறு பழக்கங்கள் மின் நுகர்வைக் கணிசமாகக் குறைக்கும். வீட்டில் உள்ள பழைய குண்டு பல்புகள் மற்றும் ட்யூப் லைட்டுகளுக்குப் பதிலாக எல்.இ.டி (LED) பல்புகளைப் பயன்படுத்துவதும் உங்கள் மின் கட்டணத்தை 'ஸ்லிம்' ஆக்க உதவும்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.