மின்சார பில் அதிகமா? இந்த ட்ரிக்கை தெரிஞ்சுக்கோங்க.. ஈசியா குறைக்கலாம்!

Published : Feb 24, 2026, 04:06 PM IST

கோடை காலத்தில் மின்சார பயன்பாடு அதிகரிப்பதால் பில் உயர்வது இயல்பு ஆகும். சரியான முன்னெச்சரிக்கை எடுத்தால் தேவையற்ற அதிக பில் வருவதை தவிர்க்கலாம்.

PREV
14
கோடையில் மின் சேமிப்பு டிப்ஸ்

கோடை காலத்தில் மின்சார பயன்பாடு அதிகரிப்பது இயல்பானது. ஈசி, ஃப்ரிட்ஜ், பேன், டிவி, வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்குவதால் மின் கட்டணம் உயர்கிறது. சில நேரங்களில் மீட்டர் கோளாறு காரணமாக கூட அதிக பில் வர வாய்ப்பு உள்ளது.

24
மின்சார செலவு குறைக்கும் வழிகள்

மீட்டர் சரியாக இயங்குகிறதா என்பதை அறிய ஒரு எளிய சோதனை செய்யலாம். முதலில் வீட்டிலுள்ள அனைத்து மின் சாதனங்களையும் அணைக்கவும். அதன் பிறகு 1000 வாட் சக்தி கொண்ட ஒரு சாதனத்தை ஒரு மணி நேரம் இயக்கவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீட்டர் ரீடிங்கை பார்க்கவும்.

34
5-ஸ்டார் சாதனங்கள்

ஒரு யூனிட் மாற்றம் இருந்தால் மீட்டர் சரியாக உள்ளது. அதிகமாக இருந்தால் மீட்டர் வேகமாக ஓடுகிறது; குறைவாக இருந்தால் மெதுவாக இயங்குகிறது. மேலும், LED பல்ப்கள் மற்றும் 5-ஸ்டார் மதிப்பீடு பெற்ற சாதனங்களைப் பயன்படுத்துவது மின்சாரத்தை 70-80% வரை சேமிக்க உதவுகிறது.

44
கோடை மின்சார சேமிப்பு

ஆரம்ப செலவு அதிகமாக இருந்தாலும் நீண்டகாலத்தில் பில் குறையும். மீட்டர் குறைபாடு இருந்தால் மின்சார வாரியத்தில் புகார் செய்யலாம். சரியான கண்காணிப்பால் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories