Mobile Network: மொபைல் போனில் நெட்வொர்க் பிரச்சனையா? ஈஸியா சரி செய்ய இதோ 5 வழிமுறைகள்!

Published : Apr 22, 2026, 02:10 PM IST

மொபைல் நெட்வொர்க் பிரச்சனைகள் சிம் கார்டு நிறுவனத்தால் மட்டும் ஏற்படுவதில்லை, உங்கள் போனிலும் இருக்கலாம். ஏரோபிளேன் மோடை ஆன்/ஆஃப் செய்வது, போனை ரீஸ்டார்ட் செய்வது, 4G மோடுக்கு மாற்றுவது போன்ற எளிய வழிகள் மூலம் சிக்னல் பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

PREV
16
நெட்வொர்க் பிரச்சனைகள்

நெட்வொர்க் (Network) பிரச்சனைகள் என்பது இன்று நம் அன்றாட வாழ்வில் மிகவும் எரிச்சலூட்டும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. இணைய வேகம் குறைதல் அல்லது இணைப்பே கிடைக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதற்கு நாம் சிம் கார்டு கம்பெனிகளை குறை சொல்வோம். ஆனால் பிரச்சனைகள் உங்க போனில் கூட இருக்கலாம்.

26
ஏரோபிளேன் மோட்

இது பழைய டெக்னிக்காக இருந்தாலும் சூப்பரான பலன்களை கொடுக்கும். மொபைலில் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், 'ஏரோபிளேன் மோடை' ஆன் செய்து 10 நொடிகள் கழித்து ஆஃப் செய்யவும். இது பக்கத்தில் இருக்கின்ற டவரோட போனை ரீ-கனெக்ட் செய்யும்.

36
போன் ரீஸ்டார்ட் செய்யலாம்

நமக்கு தூக்கம் தேவைப்படுகின்ற மாதிரி, நம்ம போனுக்கும் ஒரு சின்ன பிரேக் தேவைப்படுகிறது. ஏரோபிளேன் மோட் வேலை செய்யவில்லை என்றால் போனை ரீஸ்டார்ட் செய்யலாம். இது ஹார்டுவேரை ரீஃப்ரெஷ் செய்து வலுவான சிக்னல் இருக்கின்ற டவரை தேட வைக்கும்.

46
ஆட்டோ மோடில் செட்

நமது போன்கள் 5G அல்லது ஆட்டோ மோடில் செட் ஆகியிருக்கும். ஆனால், பல இடங்கள்ல 5G கவரேஜ் இன்னும் வீக்காக இருந்து வருகிறது. இதனால் போன் அடிக்கடி சிக்னலை மாற்றி நெட்வொர்க் பிரச்சனை வரும். உங்கள் ஏரியாவில் 5G வீக்காக இருந்தால் செட்டிங்ஸ்சில் சென்று நெட்வொர்க்கை 4G-க்கு மாற்றிக்கொள்ளுங்கள்

56
கான்கிரீட் சுவர்கள் மற்றும் மூடிய அறைகள்

தடிமனான சுவர்கள், கான்கிரீட் வழியாக சிக்னல் செல்வது கஷ்டம். நீங்கள் பேஸ்மென்ட், லிஃப்ட், இல்லை தடிமனான சுவர் இருக்கின்ற ரூம்மில் இருந்தால் சிக்னல் வீக்காக இருக்கும். ஜன்னல் பக்கத்தில் சென்றால் நன்றாக சிக்னல் கிடைக்கும்.

66
சிம் கார்டை சுத்தம் செய்யவும்

சிம் கார்டில் இருக்கின்ற தூசு கூட நெட்வொர்க்கை பாதிக்கும் தெரியுமா? போனை சுவிட்ச் ஆஃப் செய்து, சிம் கார்டை வெளியே எடுக்க வேண்டும். ஒரு மென்மையான துணியால் அதை மெதுவாக சுத்தம் செய்து திரும்ப பொறுத்த வேண்டும். இந்த சிம்பிள் வேலை உங்க நெட்வொர்க்கை சரி செய்யும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories