ஃபார்ப்ஸ் (Forbes) பத்திரிகை தகவலின்படி, சீனாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகள் பின்வரும் வாசகங்கள் கொண்ட ஸ்கேம் செய்திகளை அனுப்புகின்றனர்:
• "உங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தப்படாமல் கழிக்கப்பட்டுள்ளது."
• "உங்கள் பார்சலை டெலிவரி செய்ய முடியவில்லை."
• "உடனடியாகப் பணத்தைத் திரும்பப் பெற இங்கே கிளிக் செய்யவும்."
இந்தச் செய்திகளில் கட்டாயம் ஒரு தீங்கிழைக்கும் இணைப்பு (Malicious Link) இருக்கும். பயனர்கள் அதைக் கிளிக் செய்தவுடன், ஹேக்கர்கள் அவர்களின் வங்கி விவரங்கள், தனிப்பட்ட தரவுகள், இருப்பிடத் தகவல் மற்றும் கடவுச்சொற்களைத் திருட முடியும். மேலும், இந்த மோசடிக்காரர்கள் வெளிநாட்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தித் தப்பித்து விடுகிறார்கள். ஒரு நம்பர் தடை செய்யப்பட்டாலும், உடனடியாகப் புதிய எண்கள் மூலம் தாக்குதலைத் தொடர்கின்றனர்.