கூகுள் ஃபிளாக்ஷிப் போன் இப்போது மலிவு விலையில் கிடைக்கிறது.. ஆர்டர் குவியுது!

Published : Feb 11, 2026, 04:36 PM IST

கூகுள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான பிக்சல் 10, தற்போது விலை குறைப்புடன் கிடைக்கிறது. சக்திவாய்ந்த Tensor G5 பிராசஸர், 48MP கேமரா அமைப்பு மற்றும் க்ளீன் ஆண்ட்ராய்டு அனுபவத்துடன் வரும் இந்த போனை வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பு இது.

PREV
14
கூகுள் பிக்சல் 10 சலுகை

கூகுள் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சல் 10 தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதிக விலை காரணமாக தயங்கிய பயனர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. க்ளீன் ஆண்ட்ராய்டு அனுபவம், AI அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த கேமரா அமைப்புடன் வரும் இந்த போன், தற்போது கனிசமான குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

24
பிக்சல் 10 அம்சங்கள்

இந்த பிக்சல் 10 மாடல் OnePlus 15 5G, OPPO Find X9 மற்றும் Samsung Galaxy S25 Plus 5G போன்ற பிரபல ஃபிளாக்ஷிப் மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது. குறிப்பாக கேமரா தரம் மற்றும் மென்பொருள் அனுபவத்தில் கூகுள் தனித்தன்மையை மீண்டும் நிரூபித்துள்ளது. 6.3 இன்ச் OLED திரையுடன் 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் உச்ச பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது.

34
பிக்சல் 10 கேமரா

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளது. 4970mAh பேட்டரி, 30W வைர்ட் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டது. Tensor G5 ப்ராசஸர் இந்த போனுக்கு சக்தி அளிக்கிறது. பின்புறத்தில் 48MP பிரதான கேமரா, 13MP அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 10.8MP டெலிபோட்டோ சென்சார் (5x ஆப்டிக்கல் ஜூம்) அமைக்கப்பட்டுள்ளது.

44
கூகுள் பிக்சல் 10 விலை

முன்புறத்தில் 10.5MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த மாடல் அறிமுகமான போது அதன் ஆரம்ப விலை ரூ.79,999 ஆக இருந்தது. ஆனால் தற்போது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு கொண்ட வேரியண்ட் ரூ.70,380க்கு அமேசானில் கிடைக்கிறது. அதாவது ரூ.9,619 வரை விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் Axis Bank கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் 7.5% உடனடி தள்ளுபடி (அதிகபட்சம் ரூ.1,000) போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories