அடேங்கப்பா.. நம்ம கையெழுத்து மாதிரியே இருக்கே! கூகுள் AI செய்த வேலையை பார்த்து மிரண்டு போன இளைஞர்!

Published : Nov 27, 2025, 06:32 PM IST

Google Nano Banana கூகுளின் Nano Banana Pro AI, கேட்கப்பட்ட கேள்விக்கு பயனரின் கையெழுத்திலேயே பதில் அளித்து வியக்க வைத்துள்ளது. வைரலாகும் டெக் செய்தி உள்ளே.

PREV
15
மாணவர்களுக்கு ஜாக்பாட்.. ஆசிரியர்களுக்கு திண்டாட்டம்? கூகுளின் புதிய AI செய்யும் மாயம்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை எளிதாக்கும் என்று நினைத்தோம், ஆனால் அது மனிதர்களைப் போலவே... ஏன் அவர்களை விடத் துல்லியமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 'Nano Banana Pro' (நானோ பனானா ப்ரோ) என்ற புதிய AI டூல் செய்துள்ள காரியம், இணையவாசிகளை மட்டுமின்றி மாணவர்களையும் குதூகலப்படுத்தியுள்ளது.

25
என்ன நடந்தது? வைரலாகும் பரிசோதனை

சமீபத்தில் 'சித்' (Sid) என்ற பயனர் ஒருவர், கூகுளின் புதிய AI டூலைச் சோதித்துப் பார்க்க விரும்பினார். அவர் ஒரு காகிதத்தில் கணிதக் கேள்வி ஒன்றை தனது கைப்பட எழுதி, அதைப் புகைப்படம் எடுத்து அந்த AI-க்கு அனுப்பினார். வழக்கமாக AI டூல்கள் அந்தக் கேள்விக்குரிய விடையை 'டைப்' (Type) செய்துதான் கொடுக்கும். ஆனால், நடந்தது வேறு!

35
அச்சு அசல் கையெழுத்து!

அந்தப் பயனர் பதிவேற்றிய கணிதக் கேள்விக்குத் துல்லியமான விடையை அளித்ததோடு மட்டுமல்லாமல், அந்த விடையை அந்தப் பயனரின் சொந்த கையெழுத்திலேயே (Handwriting) அந்த AI எழுதிக் காட்டியுள்ளது. இதைப் பார்த்த அந்தப் பயனர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

"நான் ஒரு கேள்வியை படமாக எடுத்து அனுப்பினேன், அது சரியான விடையை எனது உண்மையான கையெழுத்திலேயே தந்தது. மாணவர்கள் நிச்சயம் இதை விரும்புவார்கள்," என்று அந்தப் பயனர் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

45
கூகுளின் 'நானோ பனானா ப்ரோ' என்றால் என்ன?

கூகுள் நிறுவனத்தின் மிகவும் மேம்படுத்தப்பட்ட Gemini 3 சீரிஸின் ஒரு பகுதிதான் இந்த Nano Banana Pro. இது வெறுமனே தகவல்களைத் தேடித்தருவதோடு நின்றுவிடாமல், காட்சிப் பதிவுகளை (Visuals) மிகத் துல்லியமாகப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டது.

* படங்களைப் பார்த்து சூழலைப் புரிந்துகொள்ளும்.

* மேம்பட்ட பகுத்தறிவுத் திறன் (Reasoning) கொண்டது.

* நிகழ்நேரத் தகவல்களைக் கொண்டு விரிவான காட்சிகளை உருவாக்கும் திறன் கொண்டது.

55
மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

ஏற்கனவே ChatGPT போன்ற டூல்கள் மூலம் அசைன்மென்ட்களை முடித்து வந்த மாணவர்களுக்கு, இப்போது சொந்த கையெழுத்திலேயே விடை எழுதித் தரும் இந்த AI ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆனால், இது மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்குமா அல்லது வீட்டுப்பாடங்களை (Homework) எளிதாக்குமா என்ற விவாதம் ஒருபக்கம் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எது எப்படியோ, தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை எட்டிவிட்டது என்பதை இந்த 'கையெழுத்து பிரதிபலிப்பு' சம்பவம் ஆணித்தரமாக உணர்த்துகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories