வைரஸ், ஹேக்கிங் பயமே வேண்டாம்... கணினியை பாதுகாக்கும் டாப் 5 ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர்கள்!

Published : Sep 27, 2026, 11:55 AM IST

2026-ன் சிறந்த 10 ஆன்டிவைரஸ் மென்பொருட்கள்! பிட்டெஃபென்டர், நார்டன், அவாஸ்ட் ஆகியவற்றின் பாதுகாப்புத் திறன், வேகம் மற்றும் சிறப்பம்சங்கள் முழு விவரம்!

PREV
16
டாப் 5 ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர்கள்!

இன்றைய இணைய உலகில் சைபர் அச்சுறுத்தல்கள் அசுர வேகத்தில் பரவி வருகின்றன. சமீபத்தில் காஸ்பர்ஸ்கை (Kaspersky) வெளியிட்ட முதல் காலாண்டு அறிக்கையின்படி, 2.6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட 34.3 கோடிக்கும் அதிகமான இணையவழித் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.

வெரிசோன் (Verizon) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் தரவு மீறல் புலனாய்வு அறிக்கை (DBIR), இணையப் பாதுகாப்பு மீறல்களில் 48% ரான்சம்வேர் மூலமாகவும், 31% மென்பொருட்களின் பாதுகாப்புக் குறைபாடுகள் மூலமாகவும் நடப்பதாக எச்சரிக்கிறது.

மால்வேர், ரான்சம்வேர், தகவல்களைத் திருடும் ஃபிஷிங் வலைகள் என அனைத்திலிருந்தும் உங்கள் லேப்டாப் மற்றும் மொபைல்களைக் காப்பாற்ற சரியான ஆன்டிவைரஸ் மிக அவசியம். செயல்திறன், கணினியின் வேகம், பயன்பாட்டு எளிமை ஆகியவற்றின் அடிப்படையில் சோதித்துத் தொகுக்கப்பட்ட 2026-ன் டாப் 5 ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர்ஸ் பற்றி பார்ப்போம்,

26
1. பிட்டெஃபென்டர் (Bitdefender) - நம்பர் 1 ஆல்-ரவுண்டர்!

கணினியை ஸ்லோ செய்யாமல் முழுப் பாதுகாப்பு தருவதில் இதற்கு நிகர் இதுவே. வைரஸ்கள், ட்ரோஜன்கள், ஸ்பைவேர் ஆகியவற்றை உடனுக்குடன் காலி செய்கிறது. இதன் 'Advanced Threat Defense' புத்தம் புதிய அச்சுறுத்தல்களையும் (Zero-day) துல்லியமாகக் கண்டறிகிறது.

ஹைலைட்ஸ்: விண்டோஸில் கிரிப்டோமைனிங் பாதுகாப்பு மற்றும் சிஸ்டத்தை வேகப்படுத்தும் டூல்ஸ் உண்டு. கூடுதல் திட்டங்களில் VPN மற்றும் பாஸ்வேர்ட் மேனேஜர் வசதிகளும் கிடைக்கும். AV-TEST சோதனையில் பாதுகாப்பு, வேகம், பயன்பாடு என மூன்றிலுமே 6/6/6 முழு மதிப்பெண்களை அள்ளியது. AV-Comparatives சோதனையில் 99.94% பாதுகாப்புடன் அசத்தியது (4 தவறான எச்சரிக்கைகள் மட்டுமே).

36
2. நார்டன் 360 (Norton 360)- பாதுகாப்பின் முழு அரண்!

ஒரே சந்தாவில் இணையப் பாதுகாப்பு மற்றும் அடையாளப் பாதுகாப்பை விரும்பும் வீடுகளுக்கு இது சரியான சாய்ஸ். வைரஸ் தடுப்புடன் விபிஎன், பாஸ்வேர்ட் மேனேஜர், டார்க் வெப் கண்காணிப்பு, பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் கிளவுட் பேக்கப் என அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்கிறது.

ஸ்மார்ட் ஃபயர்வால், வெப்கேமைப் பாதுகாக்கும் SafeCam மற்றும் ஏஐ அடிப்படையிலான மோசடி தடுப்பு (Scam Protection) வசதி கொண்டுள்ளது. இதன் 'Deluxe' திட்டம் மூலம் 10 சாதனங்கள் வரை பாதுகாக்கலாம். AV-TEST சோதனையில் 6/6/6 முழு மதிப்பெண்களும், AV-Comparatives-ல் 99.97% பாதுகாப்பும் பெற்றது (முதல் ஆண்டு $49.99 தள்ளுபடி சலுகை உண்டு, அடுத்த ஆண்டு புதுப்பித்தல் கட்டணத்தைக் கவனிப்பது நல்லது).

46
3. மெக்காஃபி+ பிரீமியம் (McAfee+ Premium) - ஒரே தேர்வு

வீட்டில் லேப்டாப், டேப், செல்போன் என எண்ணற்ற சாதனங்கள் இருந்தால் உங்கள் ஒரே தேர்வு இதுதான். குடும்பத் திட்டத்தில் 6 உறுப்பினர்கள் (2 பெரியவர்கள், 4 குழந்தைகள்) பயன்படுத்தலாம்; சாதனங்களின் எண்ணிக்கைக்கு வரம்பே கிடையாது (Uncapped devices)!

பாதுகாப்பான விபிஎன், தனிநபர் அடையாள கண்காணிப்பு மற்றும் ஆன்லைன் கணக்குகளைத் தூய்மைப்படுத்தும் வசதிகள் உள்ளன. AV-TEST-ல் முழு மதிப்பெண்கள் மற்றும் AV-Comparatives சோதனையில் 99.97% பாதுகாப்பு விகிதம் பெற்றது.

56
4. மால்வேர்பைட்ஸ் (Malwarebytes) - சிம்பிள் & பவர்ஃபுல்!

பெரிய மென்பொருட்கள் வேண்டாம், வைரஸ் மற்றும் மால்வேரை மட்டும் துல்லியமாக விரட்டினால் போதும் என்பவர்களுக்கான டூல். இலவசப் பதிப்பு பாதிக்கப்பட்ட கணினியை ஸ்கேன் செய்து மால்வேரை நீக்க உதவும். கட்டணப் பதிப்பில் ரியல்-டைம் பாதுகாப்பு மற்றும் இணையதளப் பாதுகாப்பு கிடைக்கிறது.

எளிமையான இடைமுகம் கொண்ட இது, AV-TEST-ல் பாதுகாப்புக்கு 5.5/6, வேகம் மற்றும் பயன்பாட்டுக்கு முழு 6/6 மதிப்பெண்களையும் பெற்றது.

66
6. அவாஸ்ட் (Avast Free Antivirus) - பைசா செலவில்லாத பாதுகாப்பு!

பணம் செலுத்தாமல் ஒரு பிராண்டட் ஆன்டிவைரஸை இயக்க விரும்பும் பயனர்களின் பிரதான சாய்ஸ். வைரஸ், மால்வேர் மற்றும் ஃபிஷிங் பாதுகாப்பை இலவசமாகவே தருகிறது.

சாதாரண ஸ்கேன்களில் சிக்காமல் சிஸ்டத்திற்குள் ஆழமாகப் பதுங்கியிருக்கும் வைரஸ்களைக் கூட, விண்டோஸ் ஆன் ஆகும் போதே தூக்கி எறியும் 'பூட்-டைம் ஸ்கேன்' (Boot-time scan) வசதி இதில் உண்டு.

வெறும் ஆன்டிவைரஸ் மட்டுமே உங்களை 100% காப்பாற்றிவிடாது. செயலிகளை உடனுக்குடன் அப்டேட் செய்வது, கடினமான கடவுச்சொற்களை வைப்பது, டூ-ஃபேக்டர் ஆதென்டிகேஷன் (2FA) பயன்படுத்துவது மற்றும் தெரியாத லிங்க்குகளைக் கிளிக் செய்யாமல் இருப்பது என உங்களின் விழிப்புணர்வும் இணையப் பாதுகாப்பிற்கு மிக முக்கியம்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories