அதன்படி, அனைத்து மொபைல் பயனர்களும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பயன்பாட்டில் ஆசியக் கோப்பை 2023 மற்றும் ICC ஆண்கள் ODI உலகக் கோப்பையை இலவசமாகப் பார்க்க முடியும். ஜியோசினிமாவின் இலவச ஐபிஎல் 2023 ஸ்ட்ரீமிங்கின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளின் மொபைல் ஸ்ட்ரீமிங்கை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.