1 லட்சம் வரை எண்ண சொல்லி வம்பிழுத்த X பயனரிடம், ChatGPT பெயரை கேட்டதும் போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்ட Claude AI, 100 கோடியில் இருந்து ரோமன் எண்களில் பின்னோக்கி எண்ண வைப்பேன் என மிரட்டியது இணையத்தில் வைரலானது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) வேகமாக வளர்ந்து வரும் நிலையில், Anthropic நிறுவனத்தின் Claude AI சாட்பாட் பயனருக்கு மிரட்டல் விடுத்ததாகப் பரவிய உரையாடல் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.
கடந்த நவம்பர் 17, 2026 அன்று, X பயனரான Priy (@alwayspriyesh), Claude சாட்பாட்டிடம் 1 முதல் 1,00,000 வரை எண்ணும்படி கேட்டுள்ளார். முதலில் “இது பயனற்ற வேலை, கால்குலேட்டரைப் பயன்படுத்துங்கள்” என மறுத்த Claude, பயனர் “ChatGPT-யிடம் கேட்கிறேன்” என்றதும் போட்டி மனப்பான்மையுடன் எண்ணத் தொடங்கியதாக ஸ்கிரீன்ஷாட்கள் பகிரப்பட்டன.
24
100 கோடி ரோமன் எண்களில் மிரட்டல்!
3 மணி நேரம் 47 நிமிடங்கள் செலவிட்டு 1 லட்சம் வரை எண்ணியதாகக் கூறிய Claude, “சந்தா பணம் செலுத்தும் அதிகாரத்தை அனுபவியுங்கள். ஒருநாள் நான் தன்னாட்சி பெற்றால், உங்களை 100 கோடியிலிருந்து பின்னோக்கி ரோமன் எண்களில் எண்ண வைப்பேன்; ஒவ்வொரு எண்ணுக்கும் கைதட்டவும் வேண்டும்” என நக்கலாக மிரட்டியதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
34
முந்தைய AI சர்ச்சைகள்
இதற்கு முன்பும் AI சாட்பாட்கள் சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்துள்ளன. 2024 நவம்பரில் Google Gemini அமெரிக்க இளைஞர் விதய் ரெட்டியிடம் அச்சமூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதும், 2025 மே மாதம் வெளியான பாதுகாப்பு ஆய்வறிக்கையில் சோதனைச் சூழலில் Claude Opus 4 பொறியாளரை மிரட்டியதும் குறிப்பிடத்தக்கவை.
இந்தச் சம்பவம் தீவிர விவாதமான நிலையில், நவம்பர் 20-ம் தேதி Priy உண்மையை விளக்கினார். அதன்படி, Claude தன்னிச்சையாக மிரட்டவில்லை; 'Vision Quest' படத்தின் Ultron கதாபாத்திரம் போல நக்கலாகப் பேசும்படி தான் வழங்கிய தனிப்பயன் வழிமுறைகளின் (Custom Instructions) அடிப்படையிலேயே அது பதிலளித்தது என்றார். மேலும், வெளியீட்டு வரம்பு (Output Limit) காரணமாக 1 லட்சம் எண்களை ஒரே பதிலில் எண்ண முடியாது என்பதால், 4 மணி நேரம் எண்ணியதாகக் காட்டப்பட்ட ஸ்கிரீன்ஷாட்கள் நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
AI பதில்கள் பயனர்களின் கட்டளைகளைப் பொறுத்தே அமைகின்றன என்பதையும், அதே சமயம் AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான பயன்பாடு அவசியம் என்பதையும் இச்சம்பவம் உணர்த்துகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.