ஏ.ஐ மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 3 மூளை பயோடைப்ஸ்: குழந்தைகளின் மனநல சிகிச்சையில் புதிய புரட்சி!

Published : Nov 25, 2026, 03:46 PM IST

குழந்தைகளிடம் ஏற்படும் ADHD, பதற்றம் ஆகியவற்றுக்குப் பின்னால் இருக்கும் 3 தனித்துவமான மூளை வகைகளை (Biotypes) விஞ்ஞானிகள் ஏ.ஐ மற்றும் fMRI மூளை ஸ்கேன்கள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

PREV
14
மூளை பயோடைப்ஸ் ஆய்வு

குழந்தைகளிடையே ஏற்படும் கவனம் சிதறல் மற்றும் அதிசெயல்பாடு குறைபாடு (ADHD) மற்றும் பதற்றம் (Anxiety) ஆகியவற்றிற்குப் பின்னால் இருக்கும் 3 தனித்துவமான உயிரியல் மூளை வகைகளை (Biotypes) ஸ்டான்ஃபோர்ட் மருத்துவப் பல்கலை. (Stanford Medicine) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'நேச்சர் மென்டல் ஹெல்த்' (Nature Mental Health) இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, மனநலப் பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
ஆய்வு நடத்தப்பட்ட விதம்

தற்போது மருத்துவர்கள் அறிகுறிகளின் பட்டியலை வைத்தே ADHD மற்றும் பதற்றத்தைக் கண்டறிகின்றனர். ஆனால், இவை இரண்டிற்கும் பொதுவான அறிகுறிகள் இருப்பதால், துல்லியமான சிகிச்சையைத் தீர்மானிப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதற்குத் தீர்வு காண, அயோவா பல்கலை. இந்த ஆய்வை மேற்கொண்டது.

அமெரிக்காவின் 9 மற்றும் 10 வயதுடைய 6,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் fMRI மூளை ஸ்கேன்கள் மற்றும் நடத்தைத் தரவுகளை ஏ.ஐ (AI) மாதிரி மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். மேலும், 224 குழந்தைகளின் டேட்டாக்களைக் கொண்டு இந்த முடிவுகள் உறுதி செய்யப்பட்டன. மூளையின் பல்வேறு பகுதிகள் இணைந்து செயல்படும் விதத்தை ஆராய்ந்ததில், மூளைச் செயல்பாட்டில் ஏற்படும் மாறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு 3 தனித்துவமான மூளை வகைகள் (Biotypes) கண்டறியப்பட்டுள்ளன.

34
கண்டறியப்பட்ட 3 மூளை வகைகள்

வெளிப்படுத்தும் மற்றும் கட்டுப்பாடற்ற வகை (Externalizing-disinhibited biotype) - இந்த வகையைச் சேர்ந்த குழந்தைகள் அதிக அவசர புத்தி (Impulsivity), கோபம், எதிர்ப்புணர்வு, ஆக்ரோஷம் மற்றும் விதிகளை மீறும் பண்புகளைக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் ADHD பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

உள்ளுக்குள் குமுறும் மற்றும் மன உளைச்சல் வகை (Internalizing-distressed biotype) - இத்தகைய குழந்தைகள் அதிக குற்ற உணர்வு, பதற்றம், எதையும் மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் (Perfectionism) மற்றும் மனச்சோர்வு அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்குப் பதற்றக் கோளாறுகள் (Anxiety disorders) ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

கலப்பு வகை (Mixed biotype) - இந்தப் பிரிவில் உள்ள குழந்தைகளுக்குக் கவனம் செலுத்துவதில் சிரமம், எரிச்சல் மற்றும் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ளும் (Self-injury) போக்கு ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. இவர்களிடமும் ADHD பாதிப்பு அதிகமாக உள்ளது.

44
நோயறிதலுக்கு முன்பே கண்டறியும் வாய்ப்பு

ஆரம்பத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்து, பின்னர் ADHD அல்லது பதற்றம் ஏற்பட்ட 693 குழந்தைகளின் பழைய மூளை ஸ்கேன்களை ஆய்வு செய்தபோது, நோய் கண்டறியப்படுவதற்கு முன்பே இந்த மூளை மாற்றங்கள் பதிவாகியிருந்தது தெரியவந்துள்ளது.

அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்பே இந்த மூளை வகைகளைக் கண்டறிவதன் மூலம், ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சையை வழங்கி பாதிப்பு தீவிரமடைவதைத் தடுக்க முடியும். மேலும், ஒவ்வொரு குழந்தையின் மூளை வகைக்கு ஏற்ற பிரத்யேக மருந்துகளைத் துல்லியமாகத் தேர்ந்தெடுக்கவும், பல வாரங்கள் காத்திருந்து மருந்துகளை மாற்றிப் பரிசோதிக்கும் சிரமத்தைத் தவிர்க்கவும் இந்த ஆய்வு பெரிதும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories