வீடுகளில் டீப்சீக்:
ஹையர், ஹைசென்ஸ், டிசிஎல் எலக்ட்ரானிக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள், டீப்சீக் மாடல்களை தங்கள் பொருட்களில் இணைத்துள்ளன. ஹூவாய், டென்சென்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் டீப்சீக் மாடல்களை பயன்படுத்துவதாக அறிவித்துள்ளன. ஏற்கனவே குரல் கட்டளைகளுக்கு செயல்படும் ஸ்மார்ட் சாதனங்கள் சந்தையில் உள்ளன. ஆனால், டீப்சீக் மாடல்கள் அதிக துல்லியத்துடன் செயல்படும் திறன் கொண்டவை.
டீப்சீக்கின் பயன்பாடு:
பெய்ஜிங்கைச் சேர்ந்த தொழில் ஆய்வாளர் லியு ஜிங்லியாங், டீப்சீக்கின் பயன்பாட்டை விளக்குகிறார். டீப்சீக்-ஆர்1 மாடலின் செமான்டிக் பார்சிங் திறனால், ரோபோ வாக்கும் கிளீனர் அதிக வேகத்துடன் செயல்படும். "மாஸ்டர் பெட்ரூமில் மரத் தரையை மெதுவாக மெருகூட்டுங்கள், ஆனால் லெகோக்களைத் தவிர்க்கவும்" போன்ற சிக்கலான கட்டளைகளைக்கூட இந்த சாதனம் புரிந்து கொள்ளும். அதாவது, குறிப்பிட்ட பகுதிகளை விட்டுவிட்டு வீட்டை சுத்தம் செய்ய முடியும்.