பொதுவாக இது போன்ற ஹோட்டல்களுக்கு வரும்போது கேமரா இருந்தால் பயம் வரும். கண்டுபிடிக்க, அறையில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, உங்கள் மொபைல் ஃபோன் கேமரா மூலம் சுற்றிப் பார்க்கவும். சிவப்பு விளக்கு எங்கும் தென்பட்டால் கவனமாக இருங்கள். மின் சாதனங்கள், குளியலறைகளை சரிபார்ப்பது மிகவும் முக்கியம். விளக்குகள், ஹீட்டர்கள், தொலைக்காட்சிகள் போன்ற மின் சாதனங்களை கவனமாக சரிபார்க்கவும். மேலும், கண்ணாடி மீது உங்கள் கையை வைத்திருங்கள்.