ஆப்பிள் நிறுவனம் தனது புதிய குறைந்த விலை லேப்டாப்பான மேக்புக் நியோ-வை அறிமுகப்படுத்தியுள்ளது. சக்திவாய்ந்த A18 Pro சிப்செட், 13 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 16 மணி நேர பேட்டரி ஆயுள் கொண்டது இந்த லேப்டாப்.
ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய குறைந்த விலை லேப்டாப் மேக்புக் நியோ-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் 13 இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சக்திவாய்ந்த A18 Pro சிப்செட் இதில் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் ஆப்பிள் லேப்டாப் வாங்க விரும்புபவர்களுக்கு இந்த மாடல் ஒரு புதிய தேர்வாக பார்க்கப்படுகிறது.
25
மேக்புக் நியோ அம்சங்கள்
இந்த மேக்புக் நியோ நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. அதில் ப்ளஷ், சிட்ரஸ், இண்டிகோ மற்றும் சில்வர் போன்ற நிறங்கள் உள்ளன. இதில் ஆப்பிள்-ன் Magic Keyboard, multi-touch trackpad மற்றும் பாதுகாப்பிற்காக Touch ID வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை பேட்டரி செயல்பாடு கிடைக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
35
ஆப்பிள் மேக்புக் நியோ லேப்டாப் விலை
இந்த லேப்டாப்பின் விலை பற்றிப் பார்க்கும்போது, 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடல் இந்தியாவில் ரூ.69,900 எந்த ஆரம்ப விலையில் கிடைக்கிறது. மேலும் 512GB ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.79,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் ரூ.10,000 வரை கல்வி தள்ளுபடி வழங்குகிறது. இந்த லேப்டாப் தற்போது முன்பதிவு செய்ய கிடைக்கிறது. விற்பனை மார்ச் 11 முதல் ஆப்பிள் இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் தொடங்கும்.
போட்டியைப் பார்க்கும்போது, இந்த குறைந்த விலையில் மேக்புக் இந்திய சந்தையில் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை உள்ள Windows லேப்டாப்கள் மற்றும் Chromebook மாடல்களுடன் போட்டியிடும். குறிப்பாக HP, Dell, Acer போன்ற நிறுவனங்களின் லேப்டாப்கள் இதன் முக்கிய போட்டியாளர்களாக இருக்கும்.
55
மேக்புக் நியோ அம்சங்கள்
அம்சங்களைப் பொருத்தவரை, மேக்புக் நியோ-வில் A18 Pro சிப் இருப்பதால் சாதாரண பயன்பாட்டில் Intel Core Ultra 5 சிப்செட் கொண்ட விண்டோஸ் லேப்டாப்புகளை விட 50% வரை வேகமான செயல்திறன் கிடைக்கும் என்று ஆப்பிள் கூறுகிறது. இதில் 13-இன்ச் Liquid Retina IPS டிஸ்ப்ளே (219ppi), 1080p FaceTime HD கேமரா, Dolby Atmos உடன் டூயல் ஸ்பீக்கர், Wi-Fi 6E மற்றும் Bluetooth 6 இணைப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 36.5Wh பேட்டரியுடன் வரும் இந்த லேப்டாப் 11 மணி நேர இணைய உலாவல் அல்லது 16 மணி நேர வீடியோ ஸ்ட்ரீமிங் வழங்கப்படுகிறது. இதன் எடை 1.23 கிலோ மட்டுமே.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.