சில பழக்கங்கள் பேட்டரியை அதிக சூடாக்கி, அதன் ஆயுளை ஒரு வருடத்திற்குள் குறைத்துவிடும். பேட்டரியை 20-80% சார்ஜில் வைத்திருப்பது மற்றும் அசல் சார்ஜரை பயன்படுத்துவது அதன் ஆயுளை நீட்டிக்க உதவும்.
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நாள்கூட பலரால் இயங்க முடியாது. காலை எழுந்ததும் முதல் இரவு தூங்கும் வரை போன் நம்முடன் தான். ஆனால் போனை எப்படிச் சார்ஜ் செய்கிறோம் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவதில்லை. “சார்ஜ் போட்டா போதும்” என்ற மனநிலையில்தான் பலரும் இருக்கிறார்கள். இந்த சாதாரண அலட்சியமான பழக்கமே, உங்கள் போன் பேட்டரியை ஒரு வருடத்திற்குள் பலவீனமாக மாற்றுவது முக்கிய காரணமாக மாறுகிறது.
25
ஓவர்நைட் சார்ஜிங் ஏன் ஆபத்து?
இரவு தூங்கும் முன் போனை சார்ஜில் வைத்து காலையில் எடுப்பது பலரின் வழக்கம். ஆனால் இதுதான் பேட்டரிக்கு மிகப் பெரிய எதிரி. போன் 100% சார்ஜ் ஆன பிறகு, மின்சாரம் தொடர்ந்து உள்ளே செல்லும் போது பேட்டரி அதிக சூடாகிறது. இந்த வெப்பம், பேட்டரியின் உள்ளே இருக்கும் செல்களை மெதுவாக சேதப்படுத்துகிறது. வெளியில் உடனடியாக பாதிப்பு தெரியாது; ஆனால் சில மாதங்களில் சார்ஜ் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
35
தவறான சார்ஜர் மற்றும் கேபிள்
அனைத்து சார்ஜர்களும் ஒரே மாதிரி அல்ல. அசல் சார்ஜர் இல்லாமல், மலிவு விலையில் கிடைக்கும் டூப்ளிகேட் சார்ஜர்-களை பயன்படுத்தினால், போனுக்கு சரியான மின்னழுத்தம் கிடைக்காது. இதனால் பேட்டரி அதிக வெப்பம் ஆகும், சில நேரங்களில் சார்ஜ் மெதுவாக ஆகும். “இன்னும் சீக்கிரம் சார்ஜ் ஆகுது” என்று நினைப்பது தவறு. அது பேட்டரியின் ஆயுளை வேகமாகக் குறைக்கும் ஒரு அறிகுறிதான்.
சார்ஜ் போட்டபடியே வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவது, ரீல் ஸ்க்ரோல் செய்வது போன்ற பழக்கங்கள் பேட்டரிக்கு இரட்டை சுமையாகும். ஒரு பக்கம் மின்சாரம் உள்ளே செல்கிறது; மறுபக்கம் சக்தி அதிகமாக வெளியே செல்கிறது. இதனால் பேட்டரி வெப்பநிலை அதிகரித்து, அதன் திறன் குறைகிறது. நீண்ட காலத்தில் போன் சூடு, திடீர் நிறுத்தம் போன்ற பிரச்சினைகள் வரும்.
55
பேட்டரியை பாதுகாப்பது எப்படி?
பேட்டரியை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க சில எளிய பழக்கங்கள் போதும். 20%–80% சார்ஜ் இடையே போனை வைத்திருப்பது சிறந்தது. தேவையில்லாமல் overnight charging தவிர்க்க வேண்டும். அசல் சார்ஜர் பயன்படுத்துவது அவசியம். சிறிய மாற்றங்கள் தான், ஆனால் அவை உங்கள் போன் பேட்டரியின் ஆயுளை பல மடங்கு அதிகரிக்கும். இன்று கவனம் செலுத்தவில்லை என்றால், ஒரு வருடத்தில் “பேட்டரி மாற்றணுமா?” என்ற கேள்வி கண்டிப்பாக வரும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.