இந்தியாவில் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலும் சலுகைகள் வரலாம் என்பதால், இது புதிய மொபைல் வாங்க சிறந்த நேரமாகும்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்தது. ஆனால் ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு பின் சில மாதங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சிறிய அளவு நிம்மதி கிடைத்துள்ளது. புதிய வரி விதிப்பின் அடிப்படையில் 12% இருந்த ஜிஎஸ்டி தற்போது 8% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
24
ஸ்மார்ட்போன் சேமிப்பு
இதன் பலனாக ரூ.20,000 வரை சில மாதங்களின் விலை குறைவு. குறிப்பாக மாணவர்கள் மற்றும் சாதாரண ஊழியர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். சாம்சங், ரியல்மி, ரெட்மி போன்ற நிறுவனங்கள் தங்களது சில மாடல்களில் ரூ.500 முதல் ரூ.1,500 வரை விலை குறைந்துள்ளன.
34
சாம்சங் விலை குறைப்பு
அதிக விலை மாடல்களில் பெரிய அளவு மாற்றம் இல்லையென்றாலும், குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் இதனை வரவேற்றுள்ளனர். மற்றொரு பக்கம், 5ஜி மாடல்களுக்கு அதிகமாக விலை குறைப்பு இல்லை. ஆனாலும் பட்ஜெட் மொபைல் வாங்க விரும்புவோருக்கு இந்த ஜிஎஸ்டி சலுகை உதவிகரமாக இருக்கிறது.
அடுத்த சில மாதங்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலும் சலுகைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மொபைல் சந்தையில் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே புதிய மொபைல் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாங்க வேண்டிய நேரம் ஆகும்.