அப்பாடா.! 2வது சிம் ஆக்டிவா வைக்க.. புதிய ரீசார்ஜ் திட்டங்கள் வந்தாச்சு.. எது பெஸ்ட்?

Published : Sep 22, 2025, 09:40 AM IST

இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இரண்டாம் சிம் கார்டுகளுக்கு, அதிக செலவில்லாத ரீசார்ஜ் திட்டங்கள் அவசியமாகின்றன. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

PREV
14
குறைந்த செலவு ரீசார்ஜ் திட்டங்கள்

இந்தியாவில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஒரே நெட்வொர்க்கை அழைப்பிற்காகவும், மற்றொன்றை டேட்டா பயன்பாட்டிற்காகவும் வைத்திருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் இரண்டாம் சிம் அதிகமாகப் பயன்படுத்தப்படாததால், மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் தேவைப்படும் நிலை உள்ளது.

24
இரண்டாம் சிம் ரீசார்ஜ்

ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு பின், டெலிகாம் நிறுவனங்கள் சில குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளன. குறிப்பாக 28 நாட்களுக்கு குறைந்த டேட்டா மற்றும் SMS சலுகைகளுடன் வரும் திட்டங்கள் அதிகம் கவனத்தை ஈர்க்கின்றன. ஜியோ நிறுவனத்தின் 62 ரூபாய் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இதில் 6 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

34
மலிவு ரீசார்ஜ் பிளான்கள்

இரண்டாம் சிம்முக்கு இது போதுமானதாகக் கருதப்படுகிறது. அதேபோல ஏர்டெல் 65 ரூபாய் திட்டத்தில் டேட்டாவுடன் SMS சலுகையும் வழங்குகிறது. வோடஃபோன்-ஐடியா நிறுவனமும் குறைந்த விலை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 75 ரூபாய்க்கு டேட்டா மற்றும் வோடஃபோன் பிளே சலுகை கிடைக்கிறது.

44
நீண்ட செல்லுபடியுள்ள சிம் பிளான்

இதனை குறிப்பாக குறைந்த அளவில் இணையம் பயன்படுத்துவோர் தேர்வு செய்யலாம். இவ்வாறு குறைந்த விலை திட்டங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் உள்ளன. முக்கிய சிம்மில் அதிக டேட்டா திட்டம் வைத்திருப்பவர்கள், இரண்டாம் சிம்மில் இந்த மலிவு திட்டங்களைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories