BSNL Network
பிஎஸ்என்எல் 4ஜி
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி, 5ஜி என சென்றிருக்கும் நிலையில், மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவயை தான் வழங்கி வருகிறது. நாங்கள் எப்போது தான் 4ஜி சேவையை பெறுவது என பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஏங்கித் தவித்து வரும் நிலையில், 4ஜி சேவையை கொண்டு வரும் பணியில் பிஎஸ்என்எல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை நாடு முழுவதும் முழுமையாக கொண்டு வரப்படும் எனவும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் டவர்களை நிறுவி வருகிறது.
BSNL SIM
3ஜி சேவை துண்டிப்பு
இந்நிலையில், ஜனவரி 15ம் தேதி முதல் 3ஜி சேவையை நிறுத்த பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. அதாவது 4ஜி நெட்வொர்க்கை கொண்டு வருவதற்காக பீகார் மாநிலம் பாட்னாவில் 3ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுத்த உள்ளது. முதற்கட்டமாக பீகாரின் முங்கர், ககாரியா, பெகுசராய், கதிஹார் மற்றும் மோதிஹாரி ஆகிய இடங்களில் 3G நெட்வொர்க்கை நிறுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் அட்டகாசமான 90 நாள் வேலிடிட்டி திட்டம்: ஒரு நாளைக்கு ரூ.1 தான்
BSNL Recharge Plans
முதலில் எங்கு சேவை துண்டிக்கப்படும்?
இதன் காரணமாக பிஎஸ்என்எல் 3ஜி சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு காலிங் வசதி மட்டுமே கிடைக்கும். டேட்டா வசதி கிடைக்காது. 4ஜி நெட்வொர்க்கை முழுமையாக மேம்படுத்துவதற்காக பெரும்பாலான மாவட்டங்களில் 3ஜி நெட்வொர்க் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15 முதல் பாட்னா மற்றும் பிற நகரங்களில் 3ஜி நெட்வொர்க் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 3ஜி சேவை வேலை செய்வதை நிறுத்தினால் இணையம் எப்படி இயங்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம்.
BSNL New Plans
4ஜி சிம் கார்டு எப்படி பெறுவது?
3G நெட்வொர்க் வேலை செய்வதை நிறுத்தினால், புதிய 4G சிம் உங்களுக்கு கிடைக்கும். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று பழைய 3ஜி சிம் கார்டுகளை கொடுத்து விட்டு புதிய 4ஜி சிம் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். 2017ஆம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட சிம் மாற்றப்பட்டு வருகின்றன. இதற்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஐபோன் SE 4 வெற லெவல்ல இருக்கும்! ஆனா, விலையும் எகிறப் போகுதாம்!