iPhone SE 4
முந்தைய ஐபோன் எஸ்இ (2022) மற்றும் ஐபோன் எஸ்இ 3 ஆகியவற்றைத் தொடர்ந்து ஐபோன் SE 4 ஸ்மார்ட்போனை வெளியிட ஆப்பிள் ஆயத்தமாகி வருகிறது. அடுத்த ஐபோன் SE ஸ்மார்ட்போன் பற்றி ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் iPhone SE 4 ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone SE 4 update
தென் கொரியாவில் இருந்து கிடைத்துள்ள ஒரு தகவலின்படி, iPhone SE 4 விலை சுமார் ரூ. 46,000 ஐ விட சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில், ஃபோனின் விலை 500 டாலர் (சுமார் 43,000 ரூபாய்) க்கு கீழ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
iPhone SE 4
இதற்கு முன் வெளியான தகவலில், ஐபோன் SE 4 (iPhone SE 4) விலை 499 முதல் 549 அமெரிக்க டாலர் வரை இருக்கும் (தோராயமாக ரூ. 43,000 - ரூ.47,000) எனக் கூறப்பட்டது. இது இந்தியாவில் ரூ.43,900க்கு அறிமுகமான iPhone SE 3-ன் அறிமுக விலையை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும். இந்தியாவில் அறிமுகமான சில மாதங்களில், SE 3 விலை ரூ.49,900 ஆகவும் உயர்ந்தது.
iPhone SE 4
ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) வடிவமைப்பு ஐபோன் 14 போல இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் முந்தைய ஐபோன் SE மாடல்களிலிருந்து மாறுபட்டிருக்கும் என்று தெரிகிறது. 6.1-இன்ச் OLED டிஸ்ப்ளே, ஃபேஸ் ஐடி ஆகியவையும் இருக்கும். iPhone SE 3 4.7-இன்ச் LCD திரை மற்றும் டச் ஐடியுடன் வெளியான நிலையில், இது ஒரு பெரிய அப்டேட்டாக இருக்கும்.
iPhone SE 4
பல அப்டேட்களுடன் வரும் ஐபோன் எஸ்இ 4 இந்திய வாடிக்கையாளர்களுக்கு ரூ.50,000க்கு கீழ் கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. 48-மெகாபிக்சல் கேமரா, 6.1-இன்ச் OLED டிஸ்ப்ளே, USB-C போர்ட் உள்ளிட்ட பல அப்டேட்களுடன் குறைவான விலையில் கிடைப்பது கடினம். SE 3 போலவே SE 4 மொபைலும் 49,900 ரூபாய் அறிமுக விலையில் ரிலீஸ் செய்யப்பட்டு, பிறகு விலைக் கூட்டுதவற்கு வாய்ப்பு உள்ளது. குறைவான பட்ஜெட்டில் ஐபோன் வாங்கக் காத்திருக்கும் நபர்களுக்கு iPhone SE 4 கவர்ச்சிகரமான சாய்ஸாக இருக்கும்.