சிம் வாங்க ரெடியா இருங்க.. பிஎஸ்என்எல் கஸ்டமர்ஸுக்கு 'ஜாக்பாட்' நியூஸ்! இனி இணைய வேகம் பறக்கும்!"

Published : Dec 30, 2025, 09:25 PM IST

BSNL பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! புதிதாக 23,000 4ஜி டவர்கள் வருகிறது. 5ஜி அப்டேட் மற்றும் முழு விபரங்களை இங்கே காணுங்கள்.

PREV
15
BSNL பிஎஸ்என்எல்-இன் அதிரடி விரிவாக்கத் திட்டம்

தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனது 4ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில், நெட்வொர்க் கவரேஜை மேம்படுத்தும் வகையில் மேலும் 23,000 புதிய 4ஜி டவர்கள் (Sites) விரைவில் நிறுவப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மசானி அறிவித்துள்ளார். ஈடி டெலிகாம் (ET Telecom) வெளியிட்ட அறிக்கையின்படி, 5ஜி சேவைக்கான அடித்தளத்தையும் பிஎஸ்என்எல் இப்போது பலப்படுத்தி வருகிறது.

25
ஒப்பந்தத்தில் தாமதம் ஏன்?

கடந்த மே மாதம், தேஜஸ் நெட்வொர்க்ஸ் (Tejas Networks) நிறுவனத்திற்கு 18,685 டவர்களுக்கான முன்பதிவு ஆர்டரை (APO) பிஎஸ்என்எல் வழங்கியிருந்தது. இருப்பினும், இறுதி கொள்முதல் ஆர்டர் (Final Purchase Order) இன்னும் வழங்கப்படவில்லை. இது குறித்து விளக்கமளித்த அமைச்சர், "புதிய ஒப்பந்தத்தில் தேவையான அனைத்தும் முழுமையாகச் சேர்க்கப்படுவதை உறுதி செய்யவே இந்தத் தாமதம்" என்று தெளிவுபடுத்தினார்.

35
தரமான நெட்வொர்க் உறுதி!

தற்போது பிஎஸ்என்எல் வசம் சுமார் 97,000 4ஜி டவர்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆரம்பத்தில் இருந்த நெட்வொர்க் தரப் பிரச்சனைகள் அனைத்தும் வெற்றிகரமாகச் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் கூறினார். நாடு முழுவதும் வலுவான 4ஜி கவரேஜ் உறுதி செய்யப்பட்ட உடனேயே, இந்த டவர்கள் 5ஜி தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

45
5ஜி வரப்போகுது.. பிளான் என்ன?

தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட, பிஎஸ்என்எல் தனது 5ஜி சேவைக்கு 'வருவாய் பகிர்வு' (Revenue-sharing model) முறையைக் கையாளவுள்ளது. இதற்காக இரண்டு முக்கிய உத்திகளை அமைச்சர் முன்வைத்துள்ளார்:

1. 5G-as-a-Service: தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி உபகரணங்களை நிறுவுதல். இதில் வருவாய் பகிரப்படும்.

2. நேரடி மேம்பாடு: தற்போதுள்ள 4ஜி உபகரணங்களை நேரடியாக 5ஜி சேவைக்கு ஏற்ப மாற்றுதல்.

இந்த முறைகளைச் சோதிக்கப் பல பைலட் திட்டங்கள் (Pilot programs) நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

55
குவியும் வாடிக்கையாளர்கள்.. பிஎஸ்என்எல் மாஸ்!

பிஎஸ்என்எல் சேவையின் தரம் உயர்ந்து வருவதால், மக்கள் இதன் பக்கம் திரும்பியுள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் புதிதாக 26.9 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-ல் இணைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 9.25 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் பிஎஸ்என்எல் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories