BSNL: பயனர்கள் தலையில் இடியை இறக்கிய பிஎஸ்என்எல்; 3 முக்கியமான பிளான்கள் நிறுத்தம்!

Published : Feb 06, 2025, 01:18 PM IST

மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் மூன்று முக்கியமான ரீசார்ஜ் பிளான்களை நிறுத்த உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
BSNL: பயனர்கள் தலையில் இடியை இறக்கிய பிஎஸ்என்எல்; 3 முக்கியமான பிளான்கள் நிறுத்தம்!
BSNL: பயனர்கள் தலையில் இடியை இறக்கிய பிஎஸ்என்எல்; 3 முக்கியமான பிளான்கள் நிறுத்தம்!

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்கி வந்தாலும், மத்திய அரசின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டுக்கு (பிஎஸ்என்எல்) நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையையே தொடங்காத நிலையிலும், அதற்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதற்கு காரணம் குறைந்த விலையில் திட்டங்களை செயல்படுத்தி வருதே ஆகும். 

24
பிஎஸ்என்எல்

இந்நிலையில், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கப் போகிறது. அதாவது இந்த நிறுவனம் பிப்ரவரி 10, 2025 முதல் அதன் சில சிறப்புத் திட்டங்களை நிறுத்தப் போகிறது. இந்த திட்டங்களின் சிறப்பு என்னவென்றால், அவை நீண்ட செல்லுபடியாகும் கால அளவிலும் குறைந்த விலையிலும் கிடைத்தன. அதாவது பிஎஸ்என்எல் ரூ.201, ரூ.797 மற்றும் ரூ.2,999 ஆகிய விலை கொண்ட பிளான்களை நிறுத்த உள்ளன. இந்த திட்டங்கள் என்னென்ன நன்மைகளை வழங்கியது என பார்க்கலாம்.

இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் பெற ஒரே மொபைல் ஆப்!

34
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள்

பிஎஸ்என்எல் ரூ.201 திட்டம்

குறைந்த செலவில் தங்கள் சிம்மை செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கு இந்த திட்டம் சிறந்ததாக விளங்கி வந்தது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள் ஆகும். இது 300 நிமிட அழைப்பு மற்றும் 6 ஜிபி டேட்டாவை வழங்கியது. இருப்பினும், அதில் வேறு எந்த நன்மையும் இல்லை.

பிஎஸ்என்எல் ரூ.797 திட்டம்

ரூ.797 திட்டம் 300 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது, இந்த ரீசார்ஜ் மூலம் உங்கள் சிம் சுமார் 10 மாதங்கள் செயலில் இருக்கும். ஆனால் இதன் பலன்கள் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைத்தன.
முதல் 60 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் வழங்கி வந்தன. 60 நாட்களுக்குப் பிறகு அழைப்பு அல்லது டேட்டா சலுகைகள் இல்லை.

44
பட்ஜெட் பிளான்கள்

பிஎஸ்என்எல் ரூ.2,999 பிளான் 

இந்த திட்டம் ஒரு முழு வருட செல்லுபடியாகும். அதாவது, சிம் எந்த கூடுதல் ரீசார்ஜ் இல்லாமல் 365 நாட்கள் செயலில் இருந்தது. இந்த திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வதில் உள்ள தொந்தரவைத் தவிர்க்கவும், ஒரே நேரத்தில் முழு வருடத்திற்கும் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.

ஆனால் மாற்று பிளான்கள் கொண்டு வரப்படுவதால் மேற்கண்ட இந்த மூன்று பிளான்களும்  பிப்ரவரி 10ம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், பிப்ரவரி 10க்கு முன் ரீசார்ஜ் செய்யுங்கள். பிப்ரவரி 10 க்கு முன்பு நீங்கள் ரீசார்ஜ் செய்திருந்தால், உங்கள் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அதன் அனைத்து நன்மைகளையும் நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள். 

அரசு அதிகாரிகள் சாட்ஜிபிடி, டீப்சீக் போன்ற AI மாடல்களை பயன்படுத்தத் தடை!

Read more Photos on
click me!

Recommended Stories