BSNL: தினமும் 10 படம் பார்த்தாலும் டேட்டா தீராது.. வெறும் ரூ.399-க்கு பிஎஸ்என்எல் பிளான்! முழு விவரம்!

Published : Apr 17, 2026, 04:12 PM IST

BSNL Budget Plan: பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.399 விலையில் மிகவும் மலிவான ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளானின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

PREV
14
பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான்

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்கி வந்தாலும், மத்திய அரசின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டுக்கு (BSNL) நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. பிஎஸ்என்எல் குறைந்த விலையில் திட்டங்களை செயல்படுத்தி வருவதே இதற்கு காரணமாகும். இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூபாய் 399 விலையில் மிகவும் மலிவான ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

24
மாதம் எவ்வளவு டேட்டா கிடைக்கும்?

இந்த பிளான் 50 Mbps வேகம், 3.3TB மாதந்திர தரவு (Data) மற்றும் வரம்பற்ற லேண்ட்லைன் அழைப்பு ஆகிய வசதிகளை கொண்டது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள பிராட்பேண்ட் விருப்பங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் முதல் ஒரு ஆண்டுக்கு நீங்கள் மாததோறும் ரூ.399 செலுத்த வேண்டும். 12 மாதங்களுக்குப் பிறகு ரூ.449 ஆக விலை உயரும். ஆனால் இத்துடன் ஜிஎஸ்டி சேர்த்தால் மாதக் கட்டணம் ரூ.470 முதல் ரூ.500-க்குள் இருக்கும்.

34
இந்த பிளான் யார் யாருக்கு ஏற்றது?

இந்த ஃபைபர் பிராட்பேண்ட் பிளானில் இன்டெர்நெட் வேகத்தை பொறுத்தவரை பிஎஸ்என்எல் 50 Mbps வேகத்தை வழங்குகிறது. இந்த நெட் வேகம் HD அல்லது 4K ஸ்ட்ரீமிங், ஆன்லைன் வகுப்புகள், தடையற்ற வீடியோ கால்கள், வீட்டில் வேலை செய்வபவர்களுக்கு, கேமிங் அல்லது பெரிய கோப்புகளைப் பதிவிறக்க போதுமானதாகும். ஒரு மாதத்திற்கு 3.3TB வரை டேட்டா வரம்பு வழங்கப்படுதால் டேட்டாவை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை உங்கள் டேட்டா வரம்பு முடிந்தால் வேகம் குறைக்கப்படும். ஆனால் இந்த டேட்டா வரம்பே போதுமானது.

நீங்கள் பட்ஜெட் பிளானை எதிர்பார்ப்பவராகவோ, வீட்டிலிருந்து படிப்பவராகவோ அல்லது 100 Mbps-க்கும் அதிகமான இன்டெர்நெட் வேகம் தேவையில்லாதவராகவோ இருந்தால் உங்களுக்கு இந்த திட்டம் சரியாக இருக்கும். ஒட்டுமொத்தமாக பிஎஸ்என்எல்லின் ரூ.399 பிராட்பேண்ட் திட்டம் வேகமான இணையம், அன்லிம்மிடெட் கால்ஸ் மற்றும் மிகப்பெரிய டேட்டா தேவையான பயனர்களுக்கு வழங்க ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

44
இந்தத் திட்டத்தில் உள்ள நிபந்தனை

ஆனால் இந்த திட்டத்தில் சில நிபந்தனைகளும் உள்ளன. ரூ.399 விலையிலான இந்த திட்டம் எல்லா இடங்களிலும் பரவலாக கிடைப்பதில்லை. பிஎஸ்என்எல்லின் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடும் என்பதால், இதன் கிடைப்புத்தன்மை இருப்பிடத்தைப் பொறுத்தது.

இந்த பிளானில் சேருவதற்கு முன், திட்டங்கள் மற்றும் ரீசார்ஜ் குறித்து உங்கள் உள்ளூர் பிஎஸ்என்எல் அலுவலகத்திலோ அல்லது அவர்களின் இணையதளத்திலோ சரிபார்ப்பது அவசியமாகும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories