Free Data: 1 ரூபாய் செலவில்லாமல் 30 நாள் வேலிடிட்டி.. தினமும் 2GB டேட்டாவும் இருக்கு.. சூப்பர் சலுகை

Published : May 22, 2026, 07:30 PM IST

Free Data: புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் தற்போது இலவச சிம் சலுகையை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

PREV
15
மே மாதச் சலுகை

இந்திய டெலிகாம் சந்தையில் குறைந்த விலையில் அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனமாக பிஎஸ்என்எல் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. சமீபத்தில் ஒரு ரூபாய் ஃப்ரீடம் ஆஃபர்-ஐ அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல், தற்போது புதிய வாடிக்கையாளர்களுக்காக இன்னொரு அதிரடி சலுகை-ஐ அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ் இலவச சிம், தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.

25
மே 31 வரை மட்டுமே

பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த சிறப்பு சலுகை மே 31 வரை மட்டுமே கிடைக்கும். இந்த சலுகை புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலம் வழங்கப்படுவதால், பயனர்கள் எந்த ரீசார்ஜ் செலவில்லாமல் சேவையைப் பயன்படுத்த முடியும். தற்போது டெலிகாம் பயனர்கள் மத்தியில் இந்த சலுகை அதிக கவனம் பெற்று வருகிறது.

6 Days Bank Holiday: 6 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.! மக்களே உஷார்.! எந்தெந்த தேதிகளில் தெரியுமா?

35
தினமும் 2GB டேட்டா

தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுவதால், 30 நாட்களில் மொத்தமாக 60ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் அழைப்பு நன்மை காரணமாக எந்த நெட்வொர்க்-க்கும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பேச முடியும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுவதால், மொத்தம் 3,000 எஸ்எம்எஸ் பயன்பெறலாம். இந்த நன்மைகள் அனைத்தும் இலவசமாக கிடைப்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

45
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா

குறிப்பாக ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தற்போது புதிய வாடிக்கையாளர்களுக்கு-க்கு இவ்வகை இலவச சிம் சலுகை வழங்கப்படவில்லை என்பதால், பிஎஸ்என்எல்லின் இந்த நகர்வு டெலிகாம் சந்தையில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறைந்த செலவில் அதிக தரவு தேடும் பயனர்கள் மற்றும் இரண்டாம் நிலை சிம் பயன்படுத்துபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

55
பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு

இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைப்பதால், ஆர்வமுள்ளவர்கள் தங்களது அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அல்லது ரீடெயில் ஸ்டோருக்கு சென்று முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மே 31 காலக்கெடு நெருங்கி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories