அதிவேக வைஃபை டேட்டா முற்றியலும் இலவசம்! புதிய சேவையை தொடங்கிய பிஎஸ்என்எல்!

First Published | Nov 19, 2024, 12:40 PM IST

பிஎஸ்என்எல் FTTH வாடிக்கையாளர்களுக்கு இலவச தேசிய வைஃபை ரோமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை மூலம் நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வைஃபை (BSNL Wi-Fi) ஹாட்ஸ்பாட்களை இலவசமாக பயன்படுத்தலாம். இத்துடன் IFTV மற்றும் D2D சேவைகளையும் பிஎஸ்என்எல் (BSNL) அறிமுகம் செய்துள்ளது.

BSNL Free Wi-Fi

பிஎஸ்என்எல் இந்தியாவில் தேசிய வைஃபை ரோமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய சேவை வீட்டிற்கு வெளியே அதிவேக இணைய வசதியை இலவசமாக வழங்கும். இந்த சேவையை பிஎஸ்என்எல் ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) வாடிக்கையாளர்கள் மட்டும் பயன்படுத்தலாம்.

BSNL Free Wi-Fi

தேசிய வைஃபை ரோமிங் சேவையின் மூலம் பிஎஸ்என்எல் FTTH வாடிக்கையாளர்கள் வெளியே செல்லும்போது வைஃபை ஹாட்ஸ்பாட் மூலம் அதிவேக இணைய சேவையை அனுபவிக்க முடியும். நேஷனல் வைஃபை ரோமிங் சேவையைப் பயன்படுத்தி, இந்தியாவில் எந்த இடத்திலிருந்தும் பிஎஸ்என்எல் வைஃபை வசதியைப் பெறமுடியும்.

Tap to resize

BSNL Free Wi-Fi

பிஎஸ்என்எல் கொண்டுவந்துள்ள இந்த புதிய தேசிய Wi-Fi ரோமிங் சேவை நகர்ப்புற மற்றும் கிராமப்புற பயனர்களும் இணைய வசதியை எளிதாகப் பெறுவதற்கு வழிவகுக்கும். பிஎஸ்என்எல் ஹாட்ஸ்பாட் எங்கிருந்தாலும் அதை அணுக முடியும். Wi-Fi ரோமிங் சேவையின் உதவியுடன், தற்போதைய FTTH வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் Wi-Fi ஹாட்ஸ்பாட்களை இலவசமாக பயன்படுத்தலாம்.

BSNL Free Wi-Fi

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் தற்போதைய FTTH வாடிக்கையாளர்கள், https://portal.bsnl.in/ftth/wifiroaming என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவுசெய்து Wi-Fi ரோமிங் சேவையைப் பயன்படுத்தலாம்.

BSNL Free Wi-Fi

நாடு தழுவிய Wi-Fi ரோமிங் சேவையுடன் BSNL IFTV எனப்படும் முதல் ஃபைபர் அடிப்படையிலான இன்ட்ராநெட் டிவி சேவையையும் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை மூலம் 500க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை ஃபைபர் வழியாக லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் பார்க்கலாம்.

டைரக்ட் 2 டிவைஸ் (D2D) என்ற செயற்கைக்கோள் இணைப்பு சேவையையும் பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது. Wi-Fi அல்லது மொபைல் நெட்வொர்க் இணைப்பு இல்லாதபோதும் பயனர்கள் D2D சேவையை பயன்படுத்தி அவசர அழைப்புகளைச் செய்யலாம்.

BSNL Free Wi-Fi

BSNL D2D என்று அழைக்கப்பட்டும் இந்த செயற்கைக்கோள் இணைப்புச் சேவை கலிபோர்னியாவைச் சேர்ந்த தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான வியாசாட் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!