BSNL BiTV: ஓடிடி ரசிகர்களுக்கு பிஎஸ்என்எல் அளிக்கும் பரிசு; OTT + 450 டிவி சேனல்கள் இலவசம்!

Published : Feb 09, 2025, 11:13 AM IST

பிஎஸ்என்எல் நிறுவனம் ஓடிடி ரசிகர்களுக்கு பரிசளிக்கும் வகையில் ஏராளமான ஓடிடி தளங்கள், 450க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை இலவசமாக வழங்கும் BSNL BiTV சேவையை செயல்படுத்தி வருகிறது. 

PREV
14
BSNL BiTV: ஓடிடி ரசிகர்களுக்கு பிஎஸ்என்எல் அளிக்கும் பரிசு; OTT + 450 டிவி சேனல்கள் இலவசம்!
BSNL BiTV: ஓடிடி ரசிகர்களுக்கு பிஎஸ்என்எல் அளிக்கும் பரிசு; OTT + 450 டிவி சேனல்கள் இலவசம்!

இந்தியாவில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் அலை அலையாக சாய்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிஎஸ்என்எல், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் ஒருங்கிணைப்பாளரான OTTplay உடன் இணைந்து, BSNL இன்டர்டெயின்மென்ட் (BiTV) என்ற புதுமையான இணைய தொலைக்காட்சி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

24
பிஎஸ்என்எல் BSNL BiTV சேவை

இந்த BiTV சேவையை இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் கொண்டு வந்துள்ளது. இந்தச் சேவை பிஎஸ்என்எல் மொபைல் பயனர்களுக்கு பிரீமியம் உட்பட 450க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களுக்கான இலவச அணுகலை வழங்குகிறது. இதன்மூலம் பிஎஸ்என்எல் பயனர்கள் இப்போது ஸ்மார்ட்போன்களில் 450க்கும் மேற்பட்ட சேனல்களை இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். 

மேலும் ஓடிடி ரசிகர்களுக்கு பரிசளிக்கும் வகையில்  பக்திஃபிளிக்ஸ், ஷார்ட்ஃபண்ட்லி, காஞ்சா லங்கா, ஸ்டேஜ், OM TV, Playflix, Fancode, Distro, Hubhopper மற்றும் Runn TV உள்பட பல்வேறு ஓடிடி தளங்களை BSNL BiTV வழியாக கண்டுகளிக்க முடியும். இந்த லைவ் டிவி சேனல்கள், பிளாக்பஸ்டர் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஆகியவற்றை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பார்க்க முடியும். 

பட்டன் மொபைல் விலையில் ஸ்மார்ட் போன்: வெறும் ரூ.6000க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

34
பிஎஸ்என்எல் பிளான்கள்

பிஎஸ்என்எல் சிம் கார்டு உள்ளவர்களுக்கு இந்த சேவை முற்றிலும் இலவசமாகும். இதற்காக எந்தவித கட்டணமும் தனியாக செலுத்த வேண்டிய அவசியமில்லை. டிவி சேனல்களைப் பார்ப்பதற்காக DTH ரீசார்ஜ்களில் பணம் செலவழித்த மில்லியன் கணக்கான இந்திய பயனர்களுக்கு இது நிச்சயமாக ஒரு சூப்பர் ஆபர் ஆகும். இந்த BSNL BiTV சேவை அனைத்து பிஎஸ்என்எல்லின் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளதால், ரீசார்ஜ் செய்ய்யும்போதே இந்த வசதி உங்களுக்கு கிடைத்து விடும்.

44
பிஎஸ்என்எல் 4ஜி

சமீபகாலமாக ஜியோ, ஏர்டெல், வோவோபோன் ஐயா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியளித்து வரும் பிஎஸ்என்எல், இப்போது மொத்தமாக வாடிக்கையாளர்களை இழுப்பதற்காக BSNL BiTV சேவையை கொண்டு வந்துள்ளது. மறுபக்கம் நாடு முழுவதும் 4ஜி சேவையை கொண்டு வர பிஎஸ்என்எல் தீவிரமாக உள்ளது. இதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் 4ஜி டவர்களை நடும் பணி அதிவேகமாக நடந்து வருகிறது. பிஎஸ்என்எல் 4ஜி சேவை வந்தபிறகு ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ, ஏர்டெல்லை விட்டு இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Apple iphone: 'ஐபோன் 15' ரூ.30,000க்கு வாங்கலாம்; பாதிக்கு பாதி தள்ளுபடி; செம ஆபர்!

Read more Photos on
click me!

Recommended Stories