ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்ட விலைகளை அதிகரித்ததில் இருந்து அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகரித்து வருகிறது.
இதனால் புதிய, கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.200க்கும் குறைவான விலையில் பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளது.
24
பிஎஸ்என்எல் ரூ.197 பிளான்
பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்தி வரும் ரூ.197 மற்றும் ரூ.199 ஆகிய இரண்டு திட்டங்கள் குறித்து பார்ப்போம். நீண்ட செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் விரும்பினால், ரூ.197 திட்டம் சரியானதாக இருக்கும். BSNLன் ரூ.197 திட்டத்தில், பயனர்கள் முதல் 18 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பை பெற முடியும்.
இது தவிர, ஒவ்வொரு நாளும் 100 இலவச SMS வழங்கப்படுகிறது. 18 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 2GB தினசரி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த வரம்பு முடிந்த பிறகு டேட்டா வேகம் குறையும். நீண்ட செல்லுபடியை விரும்புபவர்களுக்கும் வரம்பற்ற அழைப்பு அல்லது டேட்டாவை விரும்பாதவர்களுக்கும் இந்த திட்டம் சிறந்தது.
34
பிஎஸ்என்எல் ரூ.199 பிளான்
பிஎஸ்என்எல் செயல்படுத்தி வரும் ரூ.197 திட்டத்துடன் நீங்கள் ரூ.2-ஐ மட்டும் சேர்த்தால், ரூ.199 விலையில் மற்றொரு புதிய திட்டத்தைப் பெறுவீர்கள். அழைப்பு மற்றும் டேட்டா சலுகைகளை விரும்புவோர் இந்த திட்டத்தில் நல்ல பலன்களை பெற முடியும்.
இந்த ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும். இந்த 30 நாட்களில், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற இலவச அழைப்புகளைச் செய்யலாம். இதனுடன், அவர்கள் ஒவ்வொரு நாளும் 100 இலவச SMS மற்றும் 30 நாட்களுக்கு 2GB தினசரி டேட்டாவின் நன்மையையும் பெற முடியும்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக 4ஜி சேவையை முழுமையாக கொண்டு வரும் பணியில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது. அதன் 4G நெட்வொர்க்கை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 1,00,000 புதிய 4G மொபைல் டவர்களை அமைக்க ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
பிஎஸ்என்எல் 4G சேவை இப்போது 75,000க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் மலிவு விலையில் திட்டங்களை வழங்கி வந்தாலும் இன்டர்நெட் ஸ்பீடு அதிகம் இல்லாததால் பலரும் அதில் இருந்து வெளியேறி வரும் நிலையில் 100 சதவீத 4ஜி இலக்கை அடைய விரைவாக செயல்பட்டு வருகிறது.