அம்பானிக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல்; 5 ரூபாய்க்கு பல்க் டேட்டா, வேலிடிட்டி; வாடிக்கையாளர்கள் குஷி!

First Published | Jan 23, 2025, 12:08 PM IST

பிஎஸ்என்எல் 5 ரூபாய் விலையில் பல்க் டேட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த பிளான் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு போட்டி போடும் வகையில் உள்ளது.

BSNL Plan

பிஎஸ்என்எல் பிளான் 

இந்தியாவில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடோபோன்‍‍‍ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் 4ஜி, 5ஜி சேவை என்று சென்று விட்ட நிலையில், இன்னும் 4ஜி சேவையே தொடங்காத நிலையிலும் பிஎஸ்என்எல் பக்கம் ஏராளமான வாடிக்கையாளர்கள் சாய்ந்து வருகின்றனர். 

இதற்கு முக்கிய காரணம் பிஎஸ்என்எல் குறைந்த விலையில் திட்டங்களை செயல்படுத்தி வருவதே. இந்நிலையில், பிஎஸ்என்எல்லின் ஒரு புதிய அறிவிப்பு மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது ரூ.5 க்கும் குறைவான விலையில், அன்லிமிடெட் கால்ஸ், பல்க் டேட்டா வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் கொண்டு வந்துள்ளது.

BSNL Best Plan

ரூ.897 ப்ரீபெய்ட் திட்டம்

நான் சொல்ல வருவது பிஎஸ்என்எல்லின் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இந்த திட்டம் 6 மாதங்கள் அதாவது 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தின்படி உங்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மொத்தமாக 90 ஜிபி டேட்டா வழங்கப்படும். டேட்டாவை நீங்கள் விரைவில் பயன்படுத்தி விட்டாலும் 40 Kbpsவேகத்தில் தடையின்றி இணையத்தை பயன்படுத்த முடியும். நீண்ட கால திட்டத்தை ரீசார்ஜ் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் நல்லது.

இந்தத் திட்டம் குறைந்த விலையில் நீண்ட காலம் வேலிட்டி வழங்குவது மட்டுமல்லாமல், சிம்மை செயலில் வைத்திருக்கவும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது.

பட்டன் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அம்பானி: இனி 1 ரூபாய் கூட வீணாகாது


BSNL Data Plan

5 ரூபாய்க்கு கீழே செலவு 

இந்த திட்டத்தை தினசரி அடிப்படையில் பார்த்தால் தினமும் நீங்கள் 5 ரூபாய்க்கு கீழே அதவாது ரூ.4.98 செலவு செய்தால் போதும். இந்த நன்மைகளை வேறு எங்கும் நீங்கள் காண முடியாது. இதேபோல் பிஎஸ்என்எல் ரூ.1,499 விலையில் ஆண்டு திட்டம் ஒன்றையும் செயல்படுத்தி வருகிறது. இந்த பிளான்படி மொத்தமாக 24ஜிபி டேட்டா கிடைக்கும். ஆண்டு முழுவதும் அதாவது 365 நாட்கள் வேலிட்ட்டி வழங்குகிறது. இது தவிர தினமும் 100 எஸ் எம் எஸ், அன்லிமிடெட் கால்ஸ் வசதியும் உண்டு. 

BSNL Yearly Plan

ஆண்டு பிளான் 

இதேபோன்று பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1,999 விலையில் ஆண்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 365 நாள் வேலிடிட்டி வழங்கும் பிளான் மொத்தமாக 600 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இது மட்டுமின்றி ஹார்டி கேம்ஸ், சேலஞ்சர் அரினா கேம்ஸ், கேமன் & ஆஸ்ட்ரோடெல், கேமியம், லிஸ்ட்ன் போடோகாஸ்ட், ஜிங் மியூசிக் & பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் ஆகிய சந்தாக்கள் கிடைக்கும்.

வரிசைகட்டி களமிறங்கும் ஃபோல்டிங் ஸ்மார்ட்போன்கள்! சாம்சங் முதல் கூகுள் வரை!!

Latest Videos

click me!