வரிசைகட்டி களமிறங்கும் ஃபோல்டிங் ஸ்மார்ட்போன்கள்! சாம்சங் முதல் கூகுள் வரை!!

First Published | Jan 22, 2025, 11:58 PM IST

Top 5 Foldable smartphone launches 2025: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் சந்தை 2025ஆம் ஆண்டில் புதிய பாய்ச்சலுக்குத் தயாராக உள்ளது. Samsung, Oppo, Xiaomi, Google, Motorola போன்ற முன்னணி பிராண்டுகள் தங்கள் அடுத்த தலைமுறை சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளன.

Samsung Z Flip 7

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் சாம்சங் முன்னிலை வகிக்கிறது. அதன் Galaxy Z Fold 7 மற்றும் Galaxy Z Flip 7 ஆகியவை மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களாக உள்ளன. Galaxy Z Fold 7 ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டைக் கொண்டிருக்கும். இது சற்று குறைவான சக்திவாய்ந்த 7-கோர் வேரியண்ட் கொண்டதாக இருக்கும். மெல்லிய 8 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே மற்றும் 6.5 இன்ச் கவர் டிஸ்பிளே இருக்கும். S Pen ஆதரவு இல்லாவிட்டாலும் நேர்த்தியானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறந்திருக்கும் நிலையில் 4.9 மி.மீ. தடிமன் மட்டுமே இருக்கும்.

Oppo Find N5 foldable phone

Oppo Find N5 வெளியானதும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் மெல்லியதாக இருக்கும். இது திறந்த நிலையில் வெறும் 3.7 மிமீ தடிமனில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டைட்டானியம் பாடி கொண்ட இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் இருக்கும். 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய 5,700mAh பேட்டரியைப் பெற்றிருக்கும். Oppo IPX9 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்குடன் ஸ்டைலஸ் பென் ஆதரவும் இருக்கும். ஒன்பிளஸ் ஓபன் 2 ஸ்மார்ட்போனுக்கு Find N5 வலிமையான போட்டியாக இருக்கும்.


Xiaomi Mix Flip 2

சியோமியின் Mix Flip 2 அதன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் பெரிய 5,600mAh பேட்டரியுடன் மெல்லிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும். 50MP பிரதான கேமராவுடன் டெலிஃபோட்டோ லென்ஸுக்குப் பதிலாக 50MP அல்ட்ரா-வைட் சென்சாருக்கு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 6.85-இன்ச் LTPO OLED மெயின் டிஸ்ப்ளே மற்றும் 4-இன்ச் கவர் ஸ்கிரீன், IPX8 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களும் இதில் இருக்கலாம்.

Motorola Razr 60 Ultra

மோட்டோரோலா Razr 60 Ultra ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது, இது Razr 50 Ultra மொபைலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும். ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட், 6.9 இன்ச் LTPO OLED இன்னர் டிஸ்ப்ளே மற்றும் 4 இன்ச் கவர் ஸ்கிரீன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 50MP பிரதான கேமரா மற்றும் 50MP டெலிஃபோட்டோ சென்சாருடன் இரட்டை கேமரா அமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Razr 60 Ultra ஏற்கனவே BIS சான்றிதழைப் பெற்றுள்ளது. எனவே 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Google Pixel 10 Pro Fold

கூகுளின் Pixel 10 Pro Fold செப்டம்பர் 2025 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் சிக்னேச்சர் ஸ்கொயர் ஃபோல்டிங் டிசைனைத் தக்கவைத்துக்கொள்ளும். டென்சர் ஜி5 சிப்செட், 16 GB RAM மற்றும் 256GB மற்றும் 512 GB மெமரி வேரியண்ட்களைக் கொண்டிருக்கும். கேமராவைப் பொறுத்தவரை, 48MP முதன்மை சென்சாருடன் அல்ட்ராவைடு மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ்களை உள்ளடக்கியதாக இருக்க வாய்ப்புள்ளது.

Latest Videos

click me!