BSNL தனது அதிகாரப்பூர்வ 'X' (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முக்கிய விவரங்களைப் பகிர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகள் பின்வருமாறு:
• வேலிடிட்டி: இத்திட்டம் மொத்தம் 50 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
• அழைப்பு (Calling): இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் இலவச தேசிய ரோமிங்.
• டேட்டா & எஸ்எம்எஸ்: தினமும் 2GB அதிவேக டேட்டா (வரம்புக்குப் பிறகு வேகம் குறையும்) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்.
• கூடுதல் மதிப்பு: பயனர்களுக்கு BiTV சேவைக்கு இலவச அணுகல் வழங்கப்படுகிறது. இந்த ஆப் மூலம் 350-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்களையும், பிரபலமான ஸ்ட்ரீமிங் ஆப்-களையும் பார்த்து மகிழலாம்.
• விலை: இந்தத் திட்டத்தின் தினசரி செலவு தோராயமாக ரூ. 7 மட்டுமே! ( திட்டம் விலை விவரங்களுக்கு BSNL இணையதளத்தைப் பார்க்கவும்.)