பிஎஸ்என்எல் சமீபத்தில் மூன்று திட்டங்களை (ரூ.201, ரூ.797, ரூ.2999) நிறுத்தியது. எனவே, வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி மற்றும் அதிக இணைய டேட்டா வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், தினமும் இலவச டேட்டா மற்றும் வரம்பற்ற சேவைகள் கிடைக்கும்.