Smart TV: புது டிவி வாங்கியாச்சா? சுவரில் மாட்டுவது நல்லதா.. டேபிளில் வைப்பது நல்லதா?

Published : Jun 21, 2026, 07:14 PM IST

Wall Mount: தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் டிவி வந்துவிட்டது. புது டிவி வாங்கியதும் பலருக்கும் ஒரு சந்தேகம் வரும். டிவியை சுவரில் மாட்டுவதா அல்லது டிவி யூனிட்/டேபிளில் வைப்பதா? .

PREV
15
சுவரில் டிவி மாட்டினால் கிடைக்கும் நன்மைகள்

வீட்டில் சுட்டித்தனமான குழந்தைகளோ அல்லது செல்லப் பிராணிகளோ இருந்தால், டிவி கீழே விழுந்து விபத்து ஏற்படுவதைத் தடுக்க சுவரில் மாட்டுவதே ஆகச்சிறந்த வழி. மேலும், இது வீட்டிற்கு ஒரு மாடர்ன் லுக் கொடுப்பதோடு, அறையையும் பெரிதாகக் காட்டும். குறிப்பாக, 43 இன்ச்-க்கு பெரிய டிவிகளை சுவரில் மாட்டினால், பார்க்கும் அனுபவம் இன்னும் சிறப்பாக இருக்கும்.

25
டிவி வைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியப் பாதுகாப்பு விதிகள்!

பாதுகாப்பைப் பொறுத்தவரை, உறுதியான சுவரில் சரியாகப் பொருத்தப்பட்ட வால் மவுண்ட்தான் பொதுவாகப் பாதுகாப்பான தேர்வாகக் கருதப்படுகிறது. இது டிவி கீழே விழுவதைத் தடுக்கும். ஒருவேளை நீங்கள் டிவியை டேபிளில் வைத்தால், அதன் ஸ்டாண்ட் உறுதியாக உள்ளதா என கட்டாயம் சரிபார்க்க வேண்டும். தேவைப்பட்டால், 'ஆன்டி-டிப் ஸ்டிராப்' பயன்படுத்தி டிவியை இன்னும் பாதுகாப்பாகப் பொருத்தலாம்.

35
டிவி அமைக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

டிவியின் பின்புறம் சரியான காற்றோட்டம் இருக்க போதுமான இடம் வேண்டும். இது வெப்பம் எளிதாக வெளியேறி, டிவியின் செயல்திறனை மேம்படுத்தும். மேலும், நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் டிவியை வைக்கக் கூடாது. ஹீட்டர்கள், அடுப்புகள் அல்லது பிற வெப்பத்தை உருவாக்கும் சாதனங்களுக்கு அருகிலும் வைக்க வேண்டாம். சுவரில் மாட்டும் முன், அந்தச் சுவர் டிவியின் எடையைத் தாங்குமா என்பதை கட்டாயம் சோதிக்க வேண்டும்.

45
டேபிளில் அல்லது டிவி யூனிட்டில் வைப்பது யாருக்குச் சிறந்தது?

வாடகை வீடுகளில் சுவர்களில் துளையிட உரிமையாளர்கள் அனுமதிக்காத பட்சத்தில், டிவியை ஸ்டாண்ட் அல்லது யூனிட்டில் வைப்பதே நல்ல சாய்ஸ். வீட்டின் அமைப்பை அல்லது டிவியின் இடத்தை அடிக்கடி மாற்றும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், டேபிளில் வைப்பதுதான் வசதியானது. உங்களிடம் சவுண்ட்பார், கேமிங் கன்சோல், செட்-டாப் பாக்ஸ் போன்ற பல சாதனங்கள் இருந்தால், அவற்றை ஒரே இடத்தில் நேர்த்தியாக வைக்க டிவி யூனிட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

55
55 இன்ச்-க்கு பெரிய டிவிகளுக்கு என்ன செய்வது?

உங்களுடைய டிவி 55 இன்ச் அல்லது அதற்கும் பெரியதாக இருந்தால், நீங்களாகவே அதை நிறுவ முயற்சிக்க வேண்டாம். சரியான கருவிகளுடன் பாதுகாப்பாகப் பொருத்த நிபுணர்களின் உதவியை நாடுவது எப்போதும் நல்லது. வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், டிவிக்கு நிரந்தர இடம் முடிவாகிவிட்டால், சுவர் உறுதியாக இருந்தால், வால் மவுண்ட் சிறந்த தேர்வாகும். மாறாக, நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால் அல்லது டிவியை அடிக்கடி மாற்ற வேண்டியிருந்தால், நல்ல தரமான டிவி யூனிட் அல்லது டேபிளில் வைப்பதே மிகவும் பொருத்தமானது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories