i5 லேப்டாப் வாங்கணுமா? வெறும் ரூ.50,000 க்கு எக்கச்செக்க ஆப்ஷன்ஸ் இருக்கு!

First Published | Apr 15, 2024, 3:53 PM IST

அமேசான் இணையதளத்தில் ரூ.50,000 கீழ் கிடைக்கும் இன்டெல் கோர் i5 பிராசஸர் கொண்ட லேப்டாப்கள் சில விற்பனையில் அசத்தி வருகின்றன. புதிய லேப்டாப் வாங்க விரும்புகிறவர்கள் தங்கள் தேவையைப் பொறுத்து இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

HP 15s 12th Gen Intel Core i5 Laptop

இன்டெல் கோர் i5 பிராசஸர், 8ஜிபி DDR4 ரேம், 512 ஜிபி எஸ்எஸ்டி, இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ், 15.6 இன்ச் ஸ்கிரீன் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த லேப்டாப்பில் பேக்லிட் கீபோர்டும் இருக்கிறது. பேட்டரி 7 மணி 30 நிமிடங்கள் வரை நீடித்து உழைக்கும். 45 நிமிடங்களில் 50% வரை வேகமாக சார்ஜ் ஆகிவிடும். இதன் எடை 1.69 கிலோ. விலை ரூ.49,000.

Dell 15

இன்டெல் கோர் i5 பிராசஸர், 12MB கேச் மற்றும் 10 கோர், 8GB DDR4 ரேம் மற்றும் 512GB எஸ்.எஸ்.டி., 15.6 இன்ச் ஸ்கிரீன் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த லேப்டாப் 1.66 கிலோ எடையில் இருக்கிறது. இதன் பேட்டரி ஒரு மணிநேரத்தில் 80% வரை சார்ஜ் ஆகிவிடும். இதன் விலை ரூ.48,500.

Tap to resize

HP Laptop 15

இன்டெல் கோர் i5 பிராசஸர், 8ஜிபி DDR4 ரேம், 512 ஜிபி எஸ்எஸ்டி, இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ், 15.6 இன்ச் ஸ்கிரீன், நியூமரிக் கீபோர்டு கொண்ட இந்த லேப்டாப் 1.69 கிலோ உள்ளது. இதன் பேட்டரி 7 மணி 30 நிமிடங்கள் வரை தாக்குப்பிடிக்கும். 45 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும். இதன் விலை ரூ.50,000.

Dell 14 i5

இன்டெல் கோர் i5 பிராசஸர், 16ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி டிடிஆர்4 ரேம், 512 ஜிபி எஸ்எஸ்டி, 14 இன்ச் ஸ்கிரீன், 1.48 கிலோ எடை கொண்ட இந்த லேப்டாப் ரூ,48,000 விலையில் கிடைக்கிறது.

Acer Aspire Lite 12th Gen Intel Core i5

இன்டெல் கோர் i5 பிராசெஸர், 16ஜிபி DDR4 ரேம், 512 ஜிபி எஸ்எஸ்டி, இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ், 15.6 இன்ச் ஸ்கிரீன் கொண்ட லேப்டாப் இது. 180 டிகிரி கீல் வடிவமைப்புடன் 1.59 கிலோ எடையில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. Rs 46,000.

Latest Videos

click me!