20+ OTT ஆப்ஸ்கள் இலவசம்.. Airtel-ன் சிறந்த 5 ரீசார்ஜ் திட்டங்கள்..!

Published : Jan 06, 2026, 03:58 PM IST

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் பிரீமியம் ப்ரீபெய்ட் திட்டங்கள், 20க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்ஸ்களுக்கு இலவச அணுகலை வழங்குகின்றன. ஒரே ரீசார்ஜில் பொழுதுபோக்கு மற்றும் இணைப்புத் தேவைகளை பூர்த்தி செய்ய இது ஒரு சிறந்த வழியாகும்.

PREV
13
ஏர்டெல் ஓடிடி பிளான்

பல ஓடிடி ஆப்ஸ்களை ஒரே ரீசார்ஜில் பயன்படுத்த விரும்புகிறீர்களா? அப்படி என்றால் ஏர்டெல் நிறுவனத்தின் சில பிரீமியம் ப்ரீபெய்ட் திட்டங்கள் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இந்த திட்டங்களில் 20க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல், வரம்பற்ற கால் வசதி மற்றும் தினசரி அதிக அளவு டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக, 5G டேட்டா ஆதரவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் தனது பயனர்களுக்காக பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால், ஓடிடி ஸ்ட்ரீமிங் மீது அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு, சில குறிப்பிட்ட திட்டங்கள் கூடுதல் நன்மைகளை தருகின்றன. Amazon Prime, Sony LIV போன்ற பிரபல ஓடிடி தளங்களுடன், மொத்தமாக 20க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை பயன்படுத்தும் வசதி இந்த திட்டங்களில் வழங்கப்படுகிறது.

23
ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்

ரூ.1199 மதிப்புள்ள ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். இதில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக, Amazon Prime மற்றும் Sony LIV உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் கிடைக்கும். நீண்ட காலம் ரீசார்ஜ் கவலை இல்லாமல் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வு.

ரூ.979 திட்டமும் 84 நாட்கள் செல்லுபடியாகும். இதில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஓடிடி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக, Sony LIV உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்ஸ்களுக்கு இந்த திட்டத்தில் அணுகல் கிடைக்கிறது. குறைந்த செலவில் நீண்ட கால வசதி தேடுபவர்களுக்கு இது ஏற்றது.

33
OTT ஆப்ஸ் இலவசம்

ரூ.838 திட்டம் 58 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. அதிக இணைய பயன்பாடு உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். Amazon Prime, Sony LIV உள்ளிட்ட பல ஓடிடி ஆப்ஸ்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோல், ரூ.409 (28 நாட்கள், 2.5 ஜிபி/நாள்) மற்றும் ரூ.349 (28 நாட்கள், 1.5 ஜிபி/நாள்) திட்டங்களிலும் 20க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்ஸ்களுக்கு அணுகல் வழங்கப்படுகிறது.

இந்த அனைத்து ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களிலும் வரம்பற்ற கால் வசதி மற்றும் தினமும் 100 இலவச SMS வழங்கப்படுகிறது. கூடுதலாக, Perplexity Pro AI சேவைக்கும் இலவச அணுகல் கிடைக்கிறது. ஒரே ரீசார்ஜில் இணையம், ஓடிடி, கால் வசதி என அனைத்தையும் பெற விரும்புபவர்களுக்கு, இந்த ஏர்டெல் திட்டங்கள் முழுமையான அனுபவத்தை வழங்குகின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories