இப்பவே கண்ணைக் கட்டுதா? கோடையில் வெயிலில் இளைப்பாற பட்ஜெட் விலையில் சூப்பர் ஏசி!

First Published | Mar 19, 2024, 5:48 PM IST

வெயிலில் காலம் தொடங்கிவிட்டது. வாட்டி வதைக்கும் கோடை வெப்பத்தில் இளைப்பாற பொதுமக்கள் ஏசி வாங்க ஆசைப்படுகிறார்கள். ரூ.30,000 பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஏசி மாடல்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Air conditioners

வெயிலில் காலம் தொடங்கிவிட்டது. வாட்டி வதைக்கும் கோடை வெப்பத்தில் இளைப்பாற பொதுமக்கள் ஏசி வாங்க ஆசைப்படுகிறார்கள். ரூ.30,000 பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஏசி மாடல்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Budget Air conditioners

ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் 0.9 டன் 3 ஸ்டார் 5 இன் 1 ஏசி ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்பிலிட் ஏசி தேர்வாக இருக்கும். சிறிய அறைகளில் பயன்படுத்த இது பொருத்தமாக இருக்கும். இந்த ஏசியை மொபைல் ஆப் அல்லது வாய்ஸ் கமாண்ட் மூலம் இயக்கும் ஆப்ஷன்களும் உள்ளன. இந்த ஏசிக்கு ஸ்டெபலைசர் தேவையில்லது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Budget ACs

டைகின் நிறுவனத்தின் 0.8 டன் 3 ஸ்டார் ஏசி 3 ஸ்டார் ரேட்டிங் கொண்டது. குளிர்ச்சியூட்டும் திறன் அடிப்படையில் இதுவும் சிறிய அறைக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும்போது அறை வெப்பநிலையை விரைவாக குறைக்கப் போதுமானதாக இருக்கும். ரூ.27,990 விலையில் கிடைக்கும்.

Air conditioner under Rs 30,000

லாய்டு நிறுவனத்தின் 1.0 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிலிட் ஏசி ரூ.29,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட இந்த ஏசி அறை வெப்பநிலையைப் பொறுத்து கூலிங் திறனை தானாகவே மாற்றி அமைத்துக்கொள்ளும் திறன் கொண்டது. ஓரளவுக்குப் பெரிய அறையில்கூட இதை பயன்படுத்தலாம்.

Best Air conditioner

கோத்ரேஜ் நிறுவனத்தின் 1 டன் 3 ஸ்டார் ஏசி ரூ.28,990 விலையில் விற்பனைக்கு உள்ளது. இந்த ஏசியும் மீடியம் அளவு அறைகளுக்கும் பொருந்தக்கூடியது. 52 டிகிரி செல்சியஸ் சூட்டிலும் இதமான குளிர்ச்சியைக் கொடுக்க்கூடியது. அதிக அளவுக்கு பராமரிப்புச் செலவும் ஆகாது. ஐ-சென்ஸ் என்ற நவீன தொழில்நுட்ப வசதியையும் உள்ளடக்கி இருக்கிறது.

Latest Videos

click me!