இந்த 8 ஷார்ட்கட் தெரியாம எதுவும் செய்ய முடியாது! எல்லா டாஸ்க்கையும் சிம்பிளா முடிக்க இதுதான் வழி!

First Published Feb 20, 2024, 12:54 PM IST

தினமும் வேலை நிமித்தமாகவும் பிற தேவைகளுக்காகவும் தினமும் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் பயன்படுத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லா துறைகளிலும் கணினி பயன்பாடு வந்துவிட்ட நிலையில், அனைவரும் சில கம்ப்யூட்டர் ஷார்ட்கட்களை தெரிந்து வைத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

Ctrl + C (Copy)

Ctrl + C (Copy) - செலக்ட் செய்த டெக்ஸ்ட் அல்லது ஃபைலை கிளிப்போர்டில் காப்பி செய்ய இந்த ஷார்ட்கட் பயன்படுகிறது. பின்னர் இதை தேவையான இடங்களில் பேஸ்ட் செய்யலாம்.

Ctrl + X (Cut)

Ctrl + X (Cut) - செலக்ட் செய்த டெக்ஸ்ட் அல்லது ஃபைலை இருக்கும் இடத்தில் இருந்து அகற்றி கிளிப்போர்டில் சேமிக்க பயன்படுகிறது. அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஷார்ட்கட்களில் ஒன்று இது.

Ctrl + V (Paste)

Ctrl + V (Paste) - கிளிப்போர்டில் சேமிக்கப்பட்டுள்ள டெக்ஸ்ட் அல்லது ஃபைலை கர்சர் இருக்கும் இடத்தில் இடம்பெற வைக்க பயன்படுவது.

Ctrl + Z (Undo)

Ctrl + Z (Undo) - கடைசியாகச் செய்த செயலைத் தவிர்க்க இந்த ஷார்ட்கட் உதவுகிறது. தவறு நேரும்போது அதை சரிசெய்ய இது எளிய வழி. அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஷார்ட்கட் இது.

Ctrl + Y (Redo)

Ctrl + Y (Redo) - கடைசியாக செய்து தவிர்க்கப்பட்ட செயலை மீண்டும் செய்ய வைக்கிறது. ஏற்கெனவே செய்த செயலை திரும்பச் செய்ய இது ஈசியான வழி. இதுவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஷார்ட்கட் ஆகும்.

Ctrl + S (Save)

Ctrl + S (Save) - பயன்பாட்டில் இருக்கும் கோப்பை சேமிக்க இந்த ஷார்ட்கட் உதவுகிறது. இதை பயன்படுத்தி புதிய கோப்பை கணினியில் சேமித்து வைக்கவும் முடியும். எதிர்பாராத விதமாக கோப்பு அழிந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய இது மிக முக்கியமானது.

Ctrl + P (Print)

Ctrl + P (Print) - திறக்கப்பட்ட ஆவணம் அல்லது கோப்பை அச்சிடுவதற்கான விண்டோவைத் திறக்க இந்த ஷார்ட்கட் பயன்படும். பிரிண்டருடன் இணைக்கப்பட்ட சிஸ்டம் பயன்படுத்தும் நபர் இதை தினசரி பயன்படுத்த வேண்டியிருக்கும்.

Ctrl + A (Select All)

பயன்பாட்டில் உள்ள கோப்பில் உள்ள அனைத்து டெஸ்க்டையும் செலக்ட் செய்யவோ, ஒரு விண்டோவில் உள்ள  அல்லது கோப்புகளையும் செலக்ட் செய்யவோ இது பயன்படும்.

click me!