ஸ்மார்ட்போன்ல 3 அம்சங்கள் கண்டிப்பா இருக்கணும்! பார்த்துப் பார்த்து தேர்வு செய்யும் மொபைல் பிரியர்கள்!

First Published | Jan 4, 2024, 5:53 PM IST

ஸ்மார்ட்போன்கள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு பல புதுமையான அம்சங்களுடன் புதிய மொபைல்களைக் கொண்டு வருகின்றன. பண்டிகைக் காலத்தில் சிறப்புப் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

ஸ்மார்ட்போன்கள்

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளலாம். வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் பிரீமியம் செயல்திறன் கொண்ட மொபைல்களும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

டிஸ்பிளே முக்கியம்

FHD+ Super AMOLED டிஸ்ப்ளே கொண்ட மொபைல்களை மொபைல் பிரியர்கள் அதிகம் விரும்புகிறார்கள். திரையின் பாதுகாப்புக்காக Gorilla Glass இருப்பதும் வாடிக்கையாளர்களைக் கவர்கிறது.

Tap to resize

சிறந்த கேமரா இருக்கணும்

ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) போன்ற அம்சங்கள் கொண்ட சக்திவாய்ந்த கேமரா தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்கிறது. சமீப காலத்தில் குறைந்த ஒளியிலும் சிறப்பாக படமெடுக்கும் கேமராவுக்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

செயல்திறன் பற்றும் நம்பகத்தன்மை

சிறப்பான செயல்திறனை உறுதி செய்ய சமீபத்திய பிராசெஸர் இருக்க வேண்டும். இது அன்றாட பயன்பாட்டில் தடையற்ற செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கும். இத்துடன் நீடித்து உழைக்கும் வகையில் குறைந்தது 5,000 mAh பேட்டரி இருக்கும் மொபைல்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.

ஆடியோ ஸ்பீக்கர் தரம்

இசை ஆர்வலர்கள் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் அம்சங்களை விரும்புகிறார்கள். திரைப்படங்கள், பாடல்களை ரசிக்கவும் கேமிங் பயன்பாட்டுக்காகவும் சிறப்பான ஆடியோ அம்சங்கள் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் பலரையும் கவர்கின்றன.

Latest Videos

click me!