AI வாய்ஸ் எப்படி இருக்கும்? சைபர் கிரிமினல்களை ஈசியா கண்டுபிடிக்க சில டிப்ஸ்!

First Published Jan 7, 2024, 10:43 PM IST

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் குரலை குளோனிங் செய்வது அதிகமாகி வருகிறது. பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருட AI வாய்ஸ் கால் செய்து ஏமாற்றும் மோசடிக்காரர்கள் பெருகி வருகிறார்கள்.

எதிர்பாராத அழைப்புகள்

உங்களுக்குப் பிரியமானவரிடமிருந்தோ அல்லது சக ஊழியரிடமிருந்தோ வரும் வாய்ஸ் கால், தெளிவற்றதாக இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். சந்தேகம் எழுந்தால் பேசும் நபரின் உண்மையான எண்ணில் தொடர்புகொண்டு உறுதிசெய்ய முயலுங்கள்.

அவசர கோரிக்கைகள்

மோசடி செய்பவர்கள் அவசரமாக முடிவெடுக்க அழுத்தம் கொடுப்பார்கள். உங்களுக்குத் தெரிந்தவர் போல் பேசுபவர் உடனடியாக பணம் தேவைப்படுவதாகச் சொன்னால், ஜாக்கிரதையாக பேசுபவர் உங்களுக்குத் தெரிந்த அதே நபரா என்று சரிபாருங்கள்.

வழக்கத்துக்கு மாறான விசித்திரமான பேச்சு

செயற்கை நுண்ணறிவு மூலம் குரலை குளோனிங் செய்வது சில சமயம் இயற்கைக்கு மாறான இடைநிறுத்தங்கள், ரோபோ போன்ற குரல் நடுவில் கேட்டக்கூடும். சந்தேகம் எழுந்தால் பேசும்போது விசித்திரமான உச்சரிப்பு இருக்கிறதா என கவனமாகக் கேளுங்கள்.

பணம் அல்லது தகவல்

உங்களுக்குத் தெரியாத மற்றும் நம்பாத ஒருவருக்கு போனில் உங்கள் வங்கிக் கணக்கு விவரம் போன்றவற்றைப் பகிர வேண்டாம். பணம் அல்லது தனிப்பட்ட தகவலைக் கேட்டால் ஒருபோதும் கொடுக்க வேண்டாம். எந்தவொரு முறையான நிறுவனமும் தொலைபேசியில் இதுபோன்ற தகவல்களைக் கேட்காது.

புகார் கொடுங்கள்

AI வாய்ஸ் கால் மோசடியில் சிக்கிவிட்டதாக நினைத்தால், அதைப் பற்றி உடனடியாக காவல்துறையிடம் புகாரளிக்கவும். சைபர் கிரைப் பிரிவையும் தொடர்புகொள்ளலாம்.

click me!