ஆப்பிள் ஐபோனுக்கு வரலாறு காணாத தள்ளுபடி?

First Published | Sep 23, 2022, 3:24 PM IST

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியன் ஆன்லைன் ஸ்டோரில் செப்டம்பர் 26 என்ற தேதியை சேமித்து வையுங்கள் என்ற விளம்பரம் வெளியாகி உள்ளது. இதன் மூலம் புதியதொரு ஆஃபர் டீஸ் செய்யப்பட்டுள்ளது.
 

பண்டிகை கால கொண்டாட்டத்தை முன்னிட்டு ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆஃபர் தொடங்கியுள்ளது. இதில் இரு எக்கச்சக்க ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல ஆஃபர் விலையில் விற்கப்பட்டு வருகின்றன.
 

அந்த வகையில், ஆப்பிள் நிறுவனமும் தனது இணையதளத்தில் ஒரு புதிய டீஸ் ஒன்றை கிளப்பியுள்ளது. அதன்படி, சேவ் தி டேட், அதாவது செப்டம்பர் 26 ஆம் தேதியில் தயாராக இருங்கள் என்று விளம்ரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஐபோன்களுகு்கு தீபாவளி ஆஃபர்கள் ஏராளமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
ஆப்பிள் நிறுவனமானது அதன் இணைய தளத்திலோ அல்லது தற்பொழுது வெளியான டீசரிலும் இது என்ன சலுகை என்பதை ஆப்பிள் வெளியிடவில்லை.
 

Tap to resize

இருந்த போதிலும், ஐபோன்கள், ஏர்போட்கள், வாட்ச்கள் மற்றும் மேக்களில் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை வழங்க, நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் பண்டிகைக் காலத்தில் சேரும் என்று எதிர் பார்க்க படுகின்றது.
சென்ற வருடம் இந்த பண்டிகை கால கட்டத்தில் ஆப்பிள் நிறுவனமானது இதே போல் ஒரு டீசரை வெளியிட்டு இருந்தது. ஆனால் எதிர் பார்த்த அளவில் ஆஃபர்கள் எதுவும் கிடைக்கவில்லை ,அதற்கு பதிலாக ஃப்ரீ கிஃப்டு களை நிறுவனம் வழங்கியது.
 

இதில் ஐபோன் 12 மினி வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஜோடி இலவச ஆப்பிள் ஏர்போட்களை  வழங்கியது .இதை தவிர காம்போ ஆஃபர்களையும்  ஆப்பிள் நிறுவனம் வழங்கியது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஃப்ரீ கிஃப்டுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்.

இருப்பினும், அவ்வாறு வரவிருக்கும் சலுகைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செல்லுபடியாகும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 26 ஆம் தேதி விற்பனை தொடங்கும் என்பதால், இது மூன்று முதல் நான்கு நாட்களுக்கு இயங்கும். "கொண்டாடுவதற்கு ஏராளம்" என்று ஆப்பிள் தனது இந்தியா ஸ்டோரில் கூறியது.
 

பிற ஐபோன் சலுகைகள்

ஆப்பிளின் குறிப்பிட்ட நேர சலுகைக்காக உங்களால் காத்திருக்க முடியாவிட்டால், ஃபிளிப்கார்ட் இப்போது பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் கீழ் ஐபோன்களுக்கு தாராளமான ஆஃபர்களை கொடுத்து வாடிக்கையாளர்களை குஷி படுத்தி வருகின்றது. 

விற்பனையின் தொடக்கத்தில், ஐபோன் 13 ரூ. 48,000 வரை குறைந்த விலையில் கிடைத்தது, ஆனால், ஆஃபர் தொடங்கிய சில நிமிடங்களில் கையிருப்பு தீர்ந்துவிட்டது.
 

ஐபோன் 13 இன் இரண்டாவது யூனிட் ரூ.51,990 சலுகையுடன் வந்தது, ஆனால் அதுவும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டது. ஃப்ளிப்கார்ட் தள்ளுபடியோடு சேர்த்து, கிரெடிட் கார்டு சலுகைகளும் உள்ளன, அவை விலையை இன்னும் குறைக்க உதவுகின்றன.

 ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம், ஐஃபோன் கே 13 இல் சுமார் ரூ. 4,500 தள்ளுபடியைப் பெறலாம். அதேபோல், அமேசான் பே ICICI வங்கியின் கிரெடிட் கார்டு அமேசானில் ஐ ஃபோன்  12 வாங்கும் போது அதிகபட்ச பலன்களைப் பெறலாம்.
 

Latest Videos

click me!