Smartphone Offers: ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடி.. அமேசானில் மெகா ஆஃபர்.. முழு லிஸ்ட்!

Published : Aug 12, 2026, 10:39 AM IST

Smartphone Offers: அமேசானில் நடக்கும் 'கிரேட் ஃப்ரீடம் சேல் 2026' சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த மெகா ஆஃபர் தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
14
அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு மெகா ஆஃபர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசானில் நடக்கும் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026 (Amazon Freedom Sale 2026) இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரைம் மற்றும் நான்-பிரைம் என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த விற்பனையில் கலந்துகொள்ளலாம். ஆப்பிள், சாம்சங், கூகுள், விவோ, மோட்டோரோலா, ஒன்பிளஸ் போன்ற பல முன்னணி பிராண்டுகளின் பல்வேறு மாடல்களை ஆஃபர் விலையில் வாங்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

24
பிரீமியம் போன்களுக்கு பெரிய தள்ளுபடி

புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த சேல் ஒரு நல்ல சான்ஸ். சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ராவின் விலை ரூ.94,999-லிருந்து ரூ.89,999-ஆகக் குறைந்துள்ளது. ரூ.1,19,999 விலைக்கு விற்பனையான விவோ X300 FE 5G இப்போது ரூ.89,999-க்கு கிடைக்கிறது. 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் ஏர் மாடலுக்கும் கணிசமான தள்ளுபடி உள்ளது. ₹1,19,900 விலை கொண்ட இந்த போன் தற்போது ரூ.97,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மடக்கக்கூடிய போனுக்கும் ஆஃபர்

சாம்சங்கின் பிரீமியம் ஃபோல்டபிள் மாடலான கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா 5G-க்கும் இந்த சேலில் விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.2,24,999 விலை கொண்ட‌ இந்த போன், இப்போது ரூ.1,99,999-க்கு கிடைக்கிறது. இதேபோல் ரூ.1,66,899 அசல் விலை கொண்ட ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி மாடலின் தற்போதைய ஆஃபர் விலை ரூ.1,56,399 ஆகும்.

34
மிட்-ரேஞ்ச் போன்களுக்கும் சூப்பர் டீல்கள்

பிரீமியம் போன்கள் மட்டுமின்றி, மிட்-ரேஞ்ச் போன்களுக்கும் சூப்பரான ஆபர்கள்உள்ளன. ரூ.94,999 விலை கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் 5G இப்போது ரூ.58,959-க்குக் கிடைக்கிறது. கூகுள் பிக்சல் 10 மாடலின் விலையும் குறைந்துள்ளது. ரூ.79,999-லிருந்து அதன் விலை ரூ.66,250 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

S26 அல்ட்ராவுக்கும் விலை குறைப்பு

சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா 5G வாங்க விரும்புபவர்களுக்கும் இந்த சேலில் நல்ல வாய்ப்பு உள்ளது. ரூ.1,69,999விலை கொண்ட இந்த போன், ரூ.1,24,999-க்குக் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 15 போனுக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.89,999 மாடல் இப்போது ரூ.85,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

44
வங்கிச் சலுகைகளும் உண்டு

நேரடி தள்ளுபடிகள் தவிர, குறிப்பிட்ட சில பொருட்களுக்கு HDFC வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஈஸி இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் 10% வரை உடனடி தள்ளுபடியும் பெறலாம். மேலும், நோ-காஸ்ட் இஎம்ஐ, கேஷ்பேக், கூப்பன் தள்ளுபடிகள், கிஃப்ட் கார்டு போன்ற கூடுதல் சலுகைகளும் ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்ப மாறுபடும்.

அமேசான் பே பயனர்களுக்கும் பலன்

அமேசான் பே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேமிப்புக்கான வாய்ப்புகளும் உள்ளன. அமேசான் பே ICICI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், தகுதியான பரிவர்த்தனைகளில் கேஷ்பேக் மற்றும் ரிவார்டுகளைப் பெறலாம்.

வாடிக்கையாளரின் இருப்பிடத்தைப் பொறுத்து, சில ஸ்மார்ட்போன்களுக்கு அதே நாள் டெலிவரி வசதியும் உள்ளது. விற்பனை முடிவதற்குள் உங்களுக்குப் பிடித்த மாடல்களின் தற்போதைய விலை மற்றும் வங்கிக் சலுகைகளைச் சரிபார்த்து வாங்குவது புத்திசாலித்தனம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories