"அடப்பாவிகளா.. இப்படியொரு முடிவா?" ரூ.200-க்கு கீழ் இருந்த பிளான்களுக்கு 'ஆப்பு'! ஏர்டெல் அதிரடி!

Published : Dec 06, 2025, 10:20 PM IST

Airtel ஏர்டெல் நிறுவனம் ரூ.121 மற்றும் ரூ.181 டேட்டா பிளான்களை நீக்கியுள்ளது. இதற்கான மாற்றுத் திட்டங்கள் மற்றும் விலை உயர்வு குறித்த முழு விவரம் இதோ.

PREV
14
Airtel ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது. ரூ.200-க்கும் குறைவான விலையில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் தற்போது ஏர்டெல் இணையதளம் மற்றும் செயலியில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது மறைமுகமாக வரவிருக்கும் கட்டண உயர்வைக் குறிப்பதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். ஒரு பயனரிடம் இருந்து பெறும் சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்கும் நோக்கில் ஏர்டெல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

24
நீக்கப்பட்ட திட்டங்கள் எவை?

ஏர்டெல் நிறுவனம் ரூ.121 மற்றும் ரூ.181 ஆகிய இரண்டு டேட்டா பிளான்களைத் தான் தற்போது நிறுத்தியுள்ளது.

• இந்த இரண்டு திட்டங்களுமே 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டவை.

• இவை முதன்மையாகக் கூடுதல் டேட்டா தேவைப்படும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருந்தன. குறைந்த விலையில் அதிக பலன்களைத் தந்து வந்த இந்தத் திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

34
மாற்றுத் திட்டங்கள்

பழைய திட்டங்கள் நீக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக்கூடிய வேறு சில மாற்றுத் திட்டங்களையும் ஏர்டெல் வைத்துள்ளது:

• ரூ.100 டேட்டா பேக்: இது 6GB டேட்டாவை 30 நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் சோனி லிவ் (SonyLIV) உட்பட 20-க்கும் மேற்பட்ட ஓடிடி (OTT) செயலிகளின் சந்தாவும் கிடைக்கிறது.

• ரூ.161 டேட்டா பேக்: அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்கு, இந்தத் திட்டம் 30 நாட்களுக்கு 12GB டேட்டாவை வழங்குகிறது.

• ரூ.195 பிளான்: இதுவும் ரூ.200-க்கு குறைவான ஒரு சிறந்த திட்டமாகும். இதில் 30 நாட்களுக்கு 12GB டேட்டாவுடன், 'ஜியோ ஹாட்ஸ்டார்' (JioHotstar) சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

• ரூ.361 பிளான்: அதிகளவு இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்காக, 50GB டேட்டாவை 30 நாட்களுக்கு வழங்கும் திட்டமும் உள்ளது.

44
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்டுள்ள அக்டோபர் 2025 அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த தொலைபேசி பயனர்களின் எண்ணிக்கை 123.1 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் ஏர்டெல் நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 12.52 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இதன் மூலம் ஏர்டெல்லின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 39.36 கோடியாக உயர்ந்து, சந்தையில் தனது இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories