Airtel Plan: ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்கள் இல்லாத யூடியூப் பிரீமியம் சேவையை வழங்க அதிரடி ஒப்பந்தம் செய்துள்ளது. 30 ஜிபி டேட்டா மற்றும் 18 ஓடிடி தளங்களுடன் கிடைக்கும் இந்த சலுகையை, ஏர்டெல் ஆப் மூலம் ஆக்டிவேட் செய்யலாம்.
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களும், அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்தத் துறையில் இந்தியாவின் இரண்டு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களாக உள்ளன. இதனால் ஜியோவும், ஏர்டெல்லும் வாடிக்கையாளர்களை கவர போட்டி போட்டு புதிய திட்டங்களை கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான ஒரு என்டர்டெயின்மென்ட் அனுபவத்தை கொடுக்க, பிரபல வீடியோ தளமான யூடியூப் உடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக ப்ரீபெய்ட் யூசர்களுக்கு யூடியூப் பிரீமியம் சேவை கிடைக்கப் போகிறது.
24
ஏர்டெல்லின் புதிய ஆஃபர்
இப்போதெல்லாம் மொபைல் டேட்டா என்பது வெறும் பேசுவதற்கு மட்டும் இல்லை. சினிமா, சீரியல் பார்ப்பது, கன்டென்ட் கிரியேட்டர்களை ஃபாலோ செய்வது, பாட்டு கேட்பது என டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட்டுக்கு தான் அதிகம் பயன்படுகிறது. வாடிக்கையாளர்களின் இந்த தேவையை புரிந்துகொண்டு தான் ஏர்டெல் இந்த புதிய ஆஃபரை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் ஷார்ட்ஸ் உட்பட எந்த வீடியோவையும் விளம்பரங்கள் இல்லாமல் யூடியூபில் பார்க்கலாம். அதோடு பேக்கிரவுண்ட் பிளேபேக், ஆஃப்லைன் டவுன்லோட் மற்றும் யூடியூப் மியூசிக் பிரீமியம் வசதிகளும் கிடைக்கும்.
34
ரூ.200 ஓடிடி டாப்-அப்
ஏர்டெல் ஏற்கனவே வழங்கி வரும் ₹200 ஓடிடி டாப்-அப் பேக்கில் (30 ஜிபி கூடுதல் டேட்டாவுடன்) இப்போது யூடியூப் பிரீமியம் சேவையும் சேர்ந்துள்ளது. இந்த பேக்கில் பிரைம் வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 பிரீமியம், சோனிலிவ் என மொத்தம் 18க்கும் மேற்பட்ட முன்னணி ஓடிடி தளங்கள் கிடைக்கின்றன.
ஆக்டிவாக ஒரு ப்ரீபெய்ட் பிளான் வைத்திருக்கும் எந்த ஒரு ஏர்டெல் வாடிக்கையாளரும் இந்த டாப்-அப்பை பெற முடியும். ரீசார்ஜ் செய்த பிறகு, ஏர்டெல் ஆப்பில் உள்ள 'ரிவார்ட்ஸ் அண்ட் ஓடிடிஸ்' (Rewards and OTTs) பகுதிக்கு சென்று யூடியூப் பிரீமியம் வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளான் முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் மீண்டும் டாப்-அப் செய்து சேவையை தொடரலாம்.
ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய ரூ.200 ஓடிடி டாப்-அப் பேக்கில் கிடைக்கும் யூடியூப் பிரீமியம் மற்றும் 18 ஓடிடி சேவைகளை, வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போன் தவிர ஸ்மார்ட் டிவி, டேப்லெட் மற்றும் லேப்டாப் போன்ற பல்வேறு சாதனங்களிலும் லாகின் செய்து ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் இந்த திட்டத்துடன் கூடுதலாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.