google classroom
கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கூகுள் கிளாஸ்ரூம் (Google Classroom) தனது பயனர்களுக்கு ஒரு புதிய மற்றும் புரட்சிகரமான AI அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம், ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பகிரும் தகவல்களின் அடிப்படையில் தானாகவே கேள்விகளை உருவாக்கும் திறன் கொண்டது. தற்போது, இந்த அம்சம் கூகுள் ஒர்க்ஸ்பேஸ் ஃபார் எஜுகேஷன் (Google Workspace for Education) சந்தாதாரர்களுக்கும், ஜெமினி எஜுகேஷன் (Gemini Education) துணை நிரல்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் கிடைக்கிறது.
google classroom
கூகுள் வெளியிட்டுள்ள வலைப்பதிவு பதிவின்படி, இந்த புதிய கேள்வி உருவாக்கும் அம்சம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்களஞ்சியப் பட்டியல் உருவாக்கும் அம்சத்தைத் தொடர்ந்து வந்துள்ளது. ஜெமினி (Gemini) மூலம் இயங்கும் இந்த AI கருவி, ஒரு பாடம், ஒரு புத்தகத்தின் அத்தியாயம் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பு பற்றிய மாணவர்களின் அறிவை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு வகையான கேள்விகளை உருவாக்க முடியும். மேலும், இந்த AI உருவாக்கிய கேள்விகளை கூகுள் டாக்ஸ் (Google Docs) அல்லது கூகுள் ஃபார்ம்ஸுக்கு (Google Forms) ஏற்றுமதி செய்யவும் முடியும்.
google classroom
உள்ளிட்ட உரையை வைத்தே கேள்விகள் உருவாக்கம்!
கூகுள் இந்த அம்சம் ஒரு "உரை சார்ந்த AI அம்சம்" (text-dependent AI feature) என்று தெரிவித்துள்ளது. அதாவது, கேள்விகளை உருவாக்க ஜெமினி கருவி, ஆசிரியர்கள் பகிர்ந்த உரையைத் தவிர வேறு எந்தத் தரவையும் பயன்படுத்தாது. தற்போது, ஆசிரியர்கள் கூகுள் டிரைவில் (Google Drive) இருந்து நேரடியாக ஒரு கோப்பைப் பதிவேற்றலாம் அல்லது கூகுள் கிளாஸ்ரூமில் உள்ளீட்டு உரையை கைமுறையாகவும் சேர்க்கலாம்.
ஆசிரியர்களுக்கு முழு கட்டுப்பாடு!
உள்ளீட்டு உரை சேர்க்கப்பட்டவுடன், ஜெமினி ஆசிரியர்ளின் தேவைக்கேற்ப கேள்விகள் அல்லது வினாடி வினாக்களை உருவாக்கும் பணியை மேற்கொள்கிறது. இந்த AI கருவி ஆசிரியர்களுக்கு கேள்விகளின் பல்வேறு அம்சங்களைத் தனிப்பயனாக்க விரிவான கட்டுப்பாட்டையும் வழங்குகிறது.
google classroom
ஆசிரியர்கள் மாணவர்கள் வெளிப்படுத்த வேண்டிய திறன்களைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, கட்டமைப்பு மற்றும் உருவாக்கம், ஊகித்தறிதல், கண்ணோட்டம், வாதங்களை மதிப்பிடுதல் போன்ற விருப்பங்களிலிருந்து அவர்கள் தேர்வு செய்யலாம். மேலும், பல தேர்வு கேள்விகள், திறந்தநிலை பதில்கள், குறுகிய பதில்கள் மற்றும் விரிவான பதில்கள் போன்ற பல்வேறு வகையான கேள்விகளையும் பயனர்கள் தேர்ந்தெடுக்கலாம். கூடுதலாக, கேள்விகளின் தர நிலை மற்றும் எண்ணிக்கையையும் ஆசிரியர்கள் தீர்மானிக்க முடியும்.
google classroom
ஆசிரியர் தகவல்களைச் சேர்த்தவுடன், ஜெமினி மாணவர்களுக்கான கேள்விகளின் தொகுப்பை உருவாக்குகிறது. இதை கூகுள் ஃபார்ம்ஸ் அல்லது கூகுள் டாக்ஸுக்கு ஏற்றுமதி செய்யலாம். ஒரு பாடம் முடிந்த பிறகு மாணவர்களின் புரிதலை மதிப்பிடுவதற்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
google classroom
இந்த புதிய அம்சம் தற்போது கூகுள் ஒர்க்ஸ்பேஸ் ஃபார் எஜுகேஷன் சந்தாதாரர்களுக்கும், ஏற்கனவே ஜெமினி எஜுகேஷன் துணை நிரல்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. அனைத்து தகுதியான பயனர்களுக்கும் இந்த புதுப்பிப்பு கிடைக்க சில வாரங்கள் ஆகலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய AI அம்சம் கல்வித்துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கூகுள் பே பரிவர்த்தனை வரலாற்றை ஈஸியா டெலீட் பண்ணலாம்! இதோ சிம்பிள் டிப்ஸ்!