வெறும் 2% போதும், 200 வருஷத்துக்கு பெட்ரோல், டீசல் தேவையே இல்ல... உலகையே ஆளப்போகும் 'தங்க ஹைட்ரஜன்'!

Published : Sep 21, 2026, 09:09 PM IST

மாலியில் ஒரு சிகரெட் தீப்பொறி காட்டிய வழி! பூமிக்கடியில் கச்சா எண்ணெயை விட 26 மடங்கு அதிக இயற்கை ஹைட்ரஜன் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெறும் 2% போதும், 200 வருஷத்துக்கு பெட்ரோல், டீசல் தேவையே இல்லை.

PREV
15
ஒரு சிகரெட் தீப்பொறி தொடங்கிவைத்த உலக எரிசக்தி புரட்சி!

1987-ம் ஆண்டு, ஆப்ரிக்க நாடான மாலியின் பூரகேபோகோ கிராமத்தில் ஒரு தொழிலாளி சாதாரண தண்ணீர்க் கிணற்றின் அருகே நின்று சிகரெட் பற்ற வைத்தார். அடுத்த நொடி நிகழ்ந்த பெரும் வெடிப்பு, அவரை மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலக விஞ்ஞானிகளையும் அதிர வைத்தது. அன்று பற்றவைக்கப்பட்ட தீப்பொறி வெறும் புகை அல்ல, பூமியின் எதிர்கால எரிசக்திப் புரட்சிக்கான தொடக்கப்புள்ளி என்பதை அப்போது யாருமே உணர்ந்திருக்கவில்லை. பூமிக்கு அடியில் அமைதியாகப் புதைந்து கிடந்த 'இயற்கை ஹைட்ரஜன்' (Natural Hydrogen) என்ற மாபெரும் எரிசக்திப் புதையலை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய தருணம் அது.

25
ஏன் இந்த அளவுக்கு ஹைட்ரஜன் முக்கியம்?

கிராமத்தை ஒளிரச் செய்த உலகின் முதல் கிணறு பல ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்த அந்தக் கிணற்றை, 2011-ல் 'ஹைட்ரோமா' என்ற நிறுவனம் மீண்டும் ஆய்வு செய்யத் தொடங்கியது. ஆச்சரியப்படும் விதமாக, 2012-ம் ஆண்டுக்குள் அந்த ஒற்றைக் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட இயற்கை ஹைட்ரஜனைக் கொண்டு ஒட்டுமொத்தப் பூரகேபோகோ கிராமமும் தடையில்லா மின்சாரத்தைப் பெறத் தொடங்கியது. இன்று வரை வணிக ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் உலகின் முதல் மற்றும் ஒரே இயற்கை ஹைட்ரஜன் கிணறு இது ஒன்றுதான்.

ஹைட்ரஜன் என்பது பிரபஞ்சத்திலேயே மிகச் சிறிய மற்றும் எளிமையான மூலக்கூறு. எரிபொருள் கலங்களில் இது ஆக்ஸிஜனுடன் இணையும் போது, எந்தவித நச்சு வாயுவோ அல்லது பசுமை இல்ல உமிழ்வோ வெளியேறுவதில்லை. மாறாக, வெப்பமும் தூய்மையான தண்ணீரும் மட்டுமே இதன் துணைப் பொருட்களாகக் கிடைக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு 100% பாதுகாப்பான இந்த ஆற்றலின் தேவை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ், வாகனங்கள் மற்றும் பெருங்கட்டிடங்களுக்குத் தேவையான சக்தியை வழங்க, இதன் தேவை 2050-க்குள் 5 மடங்கு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக, ஹைட்ரஜன் மிக லேசான மற்றும் அதிவேக வினைத்திறன் கொண்ட வாயு என்பதால், அது புதைபடிவ எரிபொருட்களைப் போலப் பூமிக்கடியில் தேங்கி நிற்காது என்றே அறிவியல் உலகம் நம்பி வந்தது. ஆனால், மாலி கிராமத்தின் கண்டுபிடிப்பு அந்தப் பழைய அறிவியல் கோட்பாட்டை சுக்குநூறாக உடைத்துவிட்டது. தற்போது உலகெங்கிலும் உள்ள முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் இந்த "தங்க ஹைட்ரஜன்" (Gold Hydrogen) இருப்புகளைத் தேடிப் பூமிக்குள் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

35
பூமிக்கு அடியில் இருக்கும் பிரமிப்பூட்டும் எரிசக்தி இருப்பு

இயற்கை ஹைட்ரஜனின் இருப்பு குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் புருவங்களை உயர்த்த வைக்கின்றன. கடந்த 1 பில்லியன் ஆண்டுகளில் பூமியின் மேலோடு உருவாக்கியுள்ள இயற்கை ஹைட்ரஜன், மனிதகுலத்தின் அடுத்த 1,70,000 ஆண்டுகளுக்கான ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது.

பூமிக்கடியில் சுமார் 6.2 டிரில்லியன் டன் ஹைட்ரஜன் இருப்பு ஒளிந்துள்ளது. இது மனிதகுலம் இதுவரை கண்டறிந்துள்ள மொத்தக் கச்சா எண்ணெய் இருப்பை விட 26 மடங்கு அதிகம். இந்த மொத்த இருப்பில் வெறும் 2% மட்டும் மனிதர்கள் வெளிக் கொண்டு வந்து பயன்படுத்தினால் கூட, நிலக்கரி மற்றும் பெட்ரோல் போன்ற புதைபடிவ எரிபொருட்களுக்கான தேவையை அடுத்த 200 ஆண்டுகளுக்கு அடியோடு முடிவுக்கு கொண்டுவர முடியும். ஆய்வகங்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை ஹைட்ரஜனைப் போலன்றி, இயற்கை ஹைட்ரஜன் பூமியின் மடியிலேயே உருவாகிச் சேமிக்கப்படுவதால், இதன் கார்பன் தடயம் (Carbon Footprint) கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகும்.

45
இயற்கை ஹைட்ரஜன் உருவாவதற்கான 6 'ரகசிய' மூலப்பொருட்கள்

பூமிக்கு அடியில் இயற்கை ஹைட்ரஜன் உருவாகி, அது வெளியேறாமல் சேமிக்கப்படுவதற்கு 6 முக்கியமான புவியியல் நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

அதிகளவிலான நிலத்தடி நீருடன், பசால்ட் (Basalt) போன்ற இரும்புச்சத்து நிறைந்த பாறைகள் அல்லது யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமங்கள் கொண்ட பாறைகள் இருக்க வேண்டும். வேதிவினையின் வேகத்தை மளமளவெனக் கூட்டும் வகையில் 250 முதல் 300 டிகிரி செல்சியஸ் வரையிலான நிலத்தடி வெப்பம் தேவை. உற்பத்தியாகும் ஹைட்ரஜன் வாயுவைத் தேக்கி வைத்துக்கொள்ளக்கூடிய நுண்துளைகள் நிறைந்த மணற்கல் போன்ற பாறை அடுக்குகள் அமைய வேண்டும்.

55
கார்பன் உமிழ்வை அடியோடு ஒழிக்கும் 'இயற்கை ஹைட்ரஜன்'!

உருவாகும் வாயு மேலே கசிந்து வெளியேறிவிடாமல் சிக்க வைக்க, அதன் மேல்புறத்தில் உப்பு அல்லது களிமண் (Shale) அடுக்கு ஒரு மூடிபோல இருக்க வேண்டும். ஹைட்ரஜன் வாயுவை உணவாக உட்கொண்டு அழிக்கும் நிலத்தடி நுண்ணுயிர்களின் செயல்பாடு குறைவாக இருக்க வேண்டும். இந்தச் சாதகமான நிலைமைகள் உலகின் அனைத்துக் கண்டங்களிலும் பரவலாக உள்ளன.

இதன் அடிப்படையில், அமெரிக்காவின் 48 மாகாணங்களில் இயற்கை ஹைட்ரஜன் புதைந்து இருக்கும் இடங்களை விஞ்ஞானிகள் வரைபடமாகவே வெளியிட்டுள்ளனர்.சுரங்கத் தொழில்கள் முதல் விவசாய உரங்கள் தயாரிப்பு வரை கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த முடியாத துறைகளில் கூட, இந்தத் தூய்மையான இயற்கை ஹைட்ரஜன் ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக அமையப் போகிறது. பூமி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை நெருக்கடியில் இருந்து உலகைக் காப்பாற்றும் மிகச் சிறந்த ஆற்றல் புரட்சியாக இது திகழும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories