
இன்றைய தேதியில் ஒரு சாதாரண டிவியின் விலை கூட ₹10,000-ஐ தாண்டிவிட்டது. இந்தச் சூழலில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில், ஸ்மார்ட் டிவிகளுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள் அதிர வைக்கின்றன. ₹10,000-க்கும் குறைவான விலையில் பிராண்டட் டிவிகள் கூட கிடைப்பதாக விளம்பரங்கள் கொட்டுகின்றன. ஆனால், விலையை மட்டுமே பார்த்து டிவியை வாங்கினால், டிஸ்ப்ளே, ஒளிபரப்பு மற்றும் ஒலி போன்ற முக்கிய அம்சங்களில் குறைபாடு ஏற்பட்டு டிவி சீக்கிரமே பழுதாக வாய்ப்புள்ளது. எனவே, ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு முன், நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 அத்தியாவசிய அம்சங்களைப் பார்ப்போம்.
ஒரு ஸ்மார்ட் டிவிக்கு மிக முக்கிய ஆதாரமே அதன் டிஸ்ப்ளே பேனல் தான். டிஸ்ப்ளே நன்றாக இருந்தால் தான், நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் தரமான, துல்லியமான ஒளிபரப்பைப் பெற முடியும். அதனால், டிவி வாங்கும் முன், அதில் என்ன டிஸ்ப்ளே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைச் சரிபார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் டிவியில் LCD, TFT, AMOLED, OLED, IPS அல்லது QLED பேனல்களில் ஏதேனும் ஒன்று இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், அதன் ரெசல்யூஷன் (Resolution) 4K அல்லது அல்ட்ரா HD (Ultra HD) தரத்தில் இருப்பது சிறந்தது.
திரைப்படங்கள் மற்றும் இசையை முழுமையாக ரசிக்க, டிவியின் சவுண்ட் சிஸ்டம் மிகவும் முக்கியம். பெரும்பாலான பட்ஜெட் டிவிகளில் ஆடியோ தரம் குறைவாகவே இருக்கும். இதனால், நீங்கள் தனியாக சவுண்ட்பார் வாங்க வேண்டிய நிலை வரலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் வாங்கும் டிவியில் குறைந்தபட்சம் 30W ஒலி வெளியீடு (Sound Output) இருப்பதை உறுதி செய்யுங்கள். டால்பி அட்மாஸ் (Dolby Atmos) போன்ற தொழில்நுட்ப ஆதரவு இருந்தால், ஒலி அனுபவம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஸ்மார்ட் டிவியைப் பொறுத்தவரை, external ஹார்ட் டிஸ்க், கேமிங் கன்சோல்கள் மற்றும் சவுண்ட்பார் போன்ற சாதனங்களை இணைக்கப் பல போர்ட்கள் (Ports) தேவைப்படும். எனவே, நீங்கள் வாங்கும் டிவியில் 2 முதல் 3 HDMI போர்ட்கள் மற்றும் USB போர்ட்கள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இது பின்னாளைய தேவைகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
உங்கள் ஸ்மார்ட் டிவி மொபைல் போன் போலச் செயல்பட, போதுமான அளவு ரேம் (RAM) மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் (Storage) தேவை. குறைந்த ரேம் கொண்ட டிவிகள் ஆப்ஸ்களை ஓப்பன் செய்யும் போதும், நாவிக்கேட் செய்யும் போதும் மெதுவாக இயங்கும். எனவே, டிவி சீராகச் செயல்பட, குறைந்தது 32GB ஸ்டோரேஜ் கொண்ட டிவியைத் தேர்ந்தெடுப்பது, புதிய ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்ய போதுமான இடத்தைக் கொடுக்கும்.
ஒரு பட்ஜெட் டிவியை வாங்கும் போது வாரண்டி காலம் (Warranty Period) எவ்வளவு என்பதைத் தெளிவாகச் சரிபார்க்க வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கும் பல 'No-Name' பிராண்ட் டிவிகளுக்குக் குறைவான வாரண்டியே வழங்கப்படுகிறது. மேலும், நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த, டிவிக்குத் தொடர்ந்து சாஃப்ட்வேர் அப்டேட்கள் (Software Updates) கிடைக்குமா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த எளிய விஷயங்களைக் கருத்தில் கொண்டால், பணத்தை மிச்சப்படுத்தி ஒரு தரமான டிவியை வாங்கலாம்.