உங்க ஸ்மார்ட்போன் ஸ்லோவா இருக்கா.! இதை ட்ரை பண்ணி பாருங்க.!!

First Published | Jun 24, 2023, 10:00 AM IST

உங்களின் ஸ்மார்ட்போன் வேகம் மெதுவாக இருக்கிறதா? தொலைபேசி வேகம் குறைகிறதா? உங்கள் ஸ்மார்ட்போனை விரைவாக வேகப்படுத்துவது எப்படி? இங்கு பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கு முன், உங்களின் ஆண்ட்ராய்டுட் மொபைல் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் நிறை,குறைகளை தெரிந்து கொண்டால் எளிதாக ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகப்படுத்தலாம்.

பெரும்பாலான ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் அப்டேட் அறிவிப்புகளைக் காண்பிக்கும். புதிய Android OS புதுப்பிப்புகளுடன் ஒருவரின் சாதனத்தில் மேம்பாடுகளை Google மேம்படுத்துகிறது. ஒவ்வொரு அப்டேட்டும் ஸ்மார்ட்போனுக்கு அவசியமாகிறது. உங்களது மொபைலில் முதலில் அனைத்து ஆப்ஸ்களை அப்டேட் செய்யுங்கள்.

Latest Videos


உங்களின் மொபைலில் தேவையில்லாத ஆப்ஸ்களை நீக்குவது அவசியமான ஒன்று. பயன்படுத்தப்படாத மென்பொருள் என்பதும் ஆப்ஸ்களை நீக்க வேண்டும். இத்தகைய ஆப்ஸ்கள் நிறைய சேமிப்பிடத்தை எடுத்துக்கொள்கின்றன. அதேபோல வைரஸ் தடுப்பு செயலிகளைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பயன்படுத்தப்படாத பயன்பாடுகளை நிறுவல் நீக்குவது சேமிப்பிடத்தை காலியாக்குவது மட்டுமல்லாமல் பேட்டரி ஆயுளையும் நீட்டிக்கும்.

ஆண்ட்ராய்டின் செயல்திறனை மேம்படுத்த மற்றொரு பயனுள்ள வழி, சேமிப்பிடத்தைக் காலியாக்குவது. தேவையில்லாத பைல்களை நீக்கி ஸ்டோரேஜை சேமிக்க வேண்டும். இதனால் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்கும்.

ஃபோனின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மிக எளிய மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்று எப்போதாவது சாதனத்தை மறுதொடக்கம் செய்வது, அதாவது ரீஸ்டார்ட் செய்வதாகும். ஸ்மார்ட்போன் தொடர்ந்து செய்யப்பட்டு கொண்டிருப்பதால், அதன் வேகம் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே அடிக்கடி மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்வது அவசியம்.

BYPASS சார்ஜிங்.! ஜேபிஎல் ஸ்பீக்கர்கள்.! குறைந்த விலையில் மாஸ் காட்டும் Infinix Note 30 5G ஸ்மார்ட்போன்

click me!