212% அதிகரித்த ஆன்லைன் பிராடுகள்! நாட்டையே உலுக்கிய இணைய மோசடி வழக்குகள்!

First Published | Nov 5, 2023, 6:31 PM IST

டிஜிட்டல் யுகத்தில் இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரித்திருப்பது போலவே மோசடி வழக்குகளும் அதிகமாகப் பதிவாகி வருகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 25,000க்கும் மேற்பட்ட இணைய மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 8,000 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு ஆன்லைன் மோசடி வழக்குகள் 212% கூடியிருக்கின்றன.

ஹைதராபாத் கிரிப்டோகரன்சி மோசடி

ஹைதராபாத்தில் சுனில் ஷர்மா என்ற தொழிலதிபர் 2 கோடி ரூபாயை கிரிப்டோகரன்சி மோசடியில் இழந்தார். குறுகிய காலத்துக்குள் 10 கோடி ரூபாய் கிடைக்கும் என்ற நம்பி முதலீடு செய்திருந்தார். ஆனால் 2 மாதங்களுக்குப் பின் தான் ஏமாற்றப்படுவது அவருக்குத் தெரியவந்தது.

ஒடிசா டிஜிட்டல் மார்க்கெட்டிங் மோசடி

இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் மோசடி வழக்கில், ஒடிசா உட்பட பல மாநிலங்களில் இருந்து குறைந்தது 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹாங்காங்கில் பதிவுசெய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய இ-காமர்ஸ் போர்டல் மூலம் ரூ.1.5 கோடி மோசடிக்காரர்களால் அபேஸ் செய்யப்பட்டது.

Tap to resize

ராஞ்சி லாட்டரி மோசடி

ராஞ்சியில் கேரளாவைச் சேர்ந்த சோபா மேனன் என்ற பெண் லாட்டரி மோசடியில், ஒரு கோடி ரூபாயை இழந்தார். லாட்டரியில் பரிசை வென்றதாகச் சொன்னதை நம்பினார். பரிசைப் பெற வரி செலுத்தி வேண்டும் என்று கூறியதற்காக, 263 பரிவர்த்தனைகளில் ஒரு கோடி ரூபாயை மோசடி கும்பலிடம் பறிகொடுத்தார். இந்த வழக்கில் நான்கு சைபர் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

போலி பார்சல் மோசடி

இந்த வழக்கில் மோசடியில் ஈடுபட்ட கும்பல் அதிகாரிகள் போல நாடகம் ஆடி 34 வயது மருத்துவரிடம் பணம் பறித்துவிட்டது. மருத்துவருக்கு FedEx கூரியரில் அவர் பெயரில் போதைப்பொருள் பார்சல் ஒன்று வந்திருப்பதாக போன் வந்தது. போலீஸ்காரர், ரிசர்வ் வங்கி அதிகாரி, சுங்கத்துறை அதிகாரி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி போல பேசி ரூ 4.5 கோடியை பணத்தைப் பறித்துவிட்டனர்.

டேட்டிங் ஆப் மோசடி

புனேவில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் டேட்டிங் செயலி மோசடியில் சிக்கி, ஒரு கோடி ரூபாயை இழந்தார். ஆசை வார்த்தை கூறி அவருடன் பழகிவந்த பெண்ணுக்கு பல முறை லட்சக்கணக்கில் பணம் அனுப்பி ஏமாந்து போனார்.

Latest Videos

click me!