அடேய் Samsung.. நிலாவை காமிச்சு ஏமாத்திட்டியேடா! ஆதாரத்தை காட்டும் வாடிக்கையாளர்!!

First Published | Mar 13, 2023, 2:25 PM IST

சாம்சங் நிறுவனம் அண்மையில் Galaxy S23 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிலையில், நிலாவை படம்பிடிக்கும் Space Zoom என்ற அம்சம் போலியானது என்று ஆதாரங்களுடன் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில், எல்லா நிறுவனங்களும் புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து விதவிதமாக மார்க்கெட்டிங் செய்து வருகின்றன. அந்த வகையில், சாம்சங் நிறுவனம் அண்மையில் Space Zoom கேமரா நுட்பத்துடன் கூடிய Galaxy S23 என்ற பிரீமியம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. 

கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமே அது நிலாவை படம்பிடிக்கும் என்று பெரும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. பல்வேறு யூடியூபர்களும் இதை நம்பி, நிலாவை பல்வேறு கோணங்களில் போட்டோ எடுத்து தங்களது சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். 
 

இந்த நிலையில், சாம்சங்கின் Space Zoom என்ற அம்சம் போலியானது என்று வாடிக்கையாளர் ஒருவர் சில ஆதாரங்களை வைத்து குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் "u/ibreakphotos என்ற ரெடிட் பக்கத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, சாம்சங் நிலாவை துல்லியமாக படம்பிடிப்பது உண்மைதானா என்பதை கண்டறிய ஒரு எளிய சோதனை நடத்தினர். 
 

Latest Videos


Samsung Galaxy

ஏற்கெனவே, நல்ல உயர்தரத்தில் இருக்கும் நிலாவின் படத்தை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்துள்ளனர். பிறகு, போட்டோ எடிட் செய்து துல்லியத்தன்மை பிக்சல் அளவுகளை குறைத்துள்ளனர். அதாவது உயர் தர அசல் போட்டோவை, அப்படியே வெறும் ஸ்டாம்ப் சைஸ் அளவாக மாற்றிவிட்டனர். 

Samsung S23

பின்பு, எல்லா லைட்டையும் ஆஃப் செய்து, அறையை இருட்டாக்கிவிட்டு, கணினியில் ஃபுல் ஸ்கீரினில், அந்த தரம் குறைந்த நிலா போட்டோவை வைத்து, அதை சாம்சங் கேலக்ஸி எஸ் 23 போனில் ‘ஸ்பேஸ் ஜூம்’ அம்சம் மூலம் ஒரு போட்டோ எடுத்துள்ளனர். அதன்பிறகு தான் அதிர்ச்சி காத்திருந்தது.  ஒரிஜினல் நிலா போட்டோவில் (பதிவிறக்கம் செய்தது) நிழல்கள், வெளிச்சம், மேடு பள்ளங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவை அனைத்தும் கேலக்ஸி S23 போனில் எடுத்த படத்தில் இருந்தது. 

விரைவில் மலிவு விலை Oneplus Nord CE 3 அறிமுகம்? விலை, சிறப்பம்ச விவரங்கள் லீக்!

அதாவது, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம், நிலாவிலுள்ள மேடுபள்ளங்கள், தோற்றங்கள் எல்லாம் செயற்கையாக சேர்க்கப்பட்டு, ஒரிஜனல் நிலாவை போல் காட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர். சொல்லப்போனால், சாம்சங் S23 கேமராவில் ஏற்கெனவே நிலவின் பல்வேறு தோற்றங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன. எனவே, நேரடியாக நிலாவை போட்டோ எடுக்கும் போத, ஏறகெனவே பதியப்பட்ட பழைய தோற்றங்களை தான் திரையில் காட்டுகிறது. இதை வைத்து Space Zoom என்ற பெயரில், நிலாவையே படம்பிடிக்கலாம் என்று சாம்சங் மார்கெட்டிங் செய்து வருகிறது என ரெடிட் பயனர் குற்றம்சாட்டியுள்ளார்.


ரெடிட் பயனர் வெளியிட்டுள்ள பதிவு:

click me!